இலங்கை தமிழரசுக்கட்சிக்கு எதிராக சில கருப்பு ஆடுகளின் செயற்பாடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அவை தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அக்கட்சியின் பதில் தலைவர் சி.வீ.கே சிவஞானம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வலி. வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
நடவடிக்கை எடு்க்கப்படும்
வலி. வடக்கு பிரதேச சபை விடயத்தில் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் ஒருவர் தமது பணிப்புரைக்கு மாறாக செயற்பட்டுள்ளமை ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு செயற்பாடாகும்.

இதற்கு கட்சி சார்பில் உரிய நடவடிக்கை எடு்க்கப்படும். இவ்வாறான நடவடிக்கைகள் எமாற்றத்திற்குரியது.
எனினும் வலி. வடக்கு பிரதேச சபையில் தவிசாளராக தெரிவுசெய்யப்பட்டுள்ள தமது உறுப்பினர் தமிழ்தேசியத்தோடு ஒன்றினைந்து செயற்படுவார்.” என கூறியுள்ளார்.

