இலங்கை அதிபர் தேர்தலில் ரணில் தொடர்பில் எடுக்கப்படவுள்ள தீர்மானம் தொடர்பில் கட்சிக்குள் தொடர்ந்தும் விவாதிக்கப்பட்டு வருவதாக சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச(Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.
மேலும், எதிர்வரும்அதிபர் தேர்தல் தொடர்பில் சிறிலங்கா பொதுஜன பெரமுன எடுக்கும் தீர்மானங்கள் குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வருவதாகவும் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,
“சிறி லங்கா பொதுஜன பெரமுன(PJP) என்ற வகையில், பிரதிநிதித்துவப்படுத்தும் முகாமைப் பாதுகாப்பதற்கும், கட்சி உறுப்பினர்களை பாதுகாப்பதற்கும் அனைத்து தீர்மானங்களும் எடுக்கப்படும்.
நாமல் வெளியிட்ட தகவல்
அதிபர் ரணில் விக்ரமசிங்கவுடன்(Ranil Wickremesinghe) இணைந்து செல்வதா இல்லையா என்பது குறித்து பல வதந்திகள் பரவி வருகின்றன. அரசியல் என்றால் அப்படித்தான். நாங்கள் அதிகாரத்தை பெறுவதற்காக மட்டும் அரசியல் இலாபங்களுக்காக செயல்படும் அரசியல் சக்தி அல்ல.
இந்த நாட்டிற்காக, மக்களுக்காக, நாட்டின் ஒற்றுமைக்காக நாம் நம்பும் அரசியல் முகாமை பாதுகாப்பதற்காக அரசியல் முடிவுகளை எடுத்த மற்றும் எடுத்துக்கொண்டிருக்கும் மக்கள் கூட்டம்.
எனவே யார் வேண்டுமானாலும் வதந்திகளை உருவாக்கலாம். கட்சி திறந்திருக்கும், வரலாம் போகலாம். ஆனால் நாங்கள் இந்த நாட்டிற்காகவும், கட்சிக்காகவும், அர்ப்பணித்துள்ளோம்.
அதன்படி, கிராமம், குடும்ப பெயர் எதுவாக இருந்தாலும் பதற்றமின்றி வெற்றி பெறக்கூடியவரின் பெயர் தேர்தலுக்கு சமர்ப்பிக்கப்படும் .
ரணில் தொடர்பில் எடுக்கப்படவுள்ள தீர்மானம் தொடர்பில் கட்சிக்குள் தொடர்ந்தும் விவாதிக்கப்பட்டு வருகின்றது” எனவும் குறிப்பிட்டுள்ளார்.