நடிகை சமந்தாவை விவாகரத்து செய்த பிறகு நாக சைதன்யா தனது புது காதலி சோபிதா உடன் சுற்றி வந்தார்.
அவர்களுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் நிச்சயதார்த்தம் செய்து வைத்தார் நடிகர் நாகர்ஜூனா. திருமணத்திற்கான ஏற்பாடுகளையும் அவர் வேகமாக செய்து வந்தார்.

திருமண தேதி
திருமண கொண்டாட்டம் வீட்டில் தொடங்கிவிட்டதாக சமீத்தில் சோபிதா போட்டோ வெளியிட்டு அறிவித்து இருந்தார்.
இந்நிலையில் தற்போது திருமண தேதி பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது. டிசம்பர் மாதம் முதல் வாரத்தில், அநேகமாக 4ம் தேதி திருமணம் நடக்க இருப்பதாக தெரிகிறது.
குடும்பத்தினர், தெலுங்கு சினிமா துறையினர், அரசியல் பிரபலங்கள் என ஒட்டுமொத்த தெலுங்கு நட்சத்திரங்களும் அந்த திருமணத்திற்கு திரண்டு வர இருக்கிறார்களாம்.


