நாகபட்டினத்துக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான கப்பல் போக்குவரத்தானது நேற்று திடீரென இடைநிறுத்தப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இந்த கப்பல் சேவையானது உத்தியோப்பூர்வமாக
ஆரம்பிக்கப்பட்டது.
கப்பல் போக்குவரத்து
இந்நிலையில், குறித்த கப்பலானது நேற்று(05) காலை நாகபட்டினத்தில் இருந்து
புறப்பட்டு காங்கேசன்துறையை வந்தடைந்ததுள்ளது.
இவ்வாறு வந்த கப்பலானது காங்கேசன்துறையில் இருந்து நாகபட்டினத்திற்கான
பயணத்தை ஆரம்பிப்பதற்கு பயணிகளுடன் தயாராகியுள்ளது.

எனினும், கப்பலில் போதிய அளவு எரிபொருள் இன்மை காரணமாக அந்த பயணமானது
திடீரென இடைநிறுத்தப்பட்டதுடன் பயணத்திற்கு தயாராக இருந்த பயணிகள்
ஏமாற்றத்துடன் திரும்ப நேரிட்டுள்ளது.
Source: https://tamilwin.com/article/nagapattinam-and-kankesanthurai-ferry-service-1725564659

