நாட்டை அழிக்கும் கும்பல்களுடன் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் இணைய போவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நாட்டை மீட்டெடுக்கக்கூடிய சிறந்த திட்டம் தமது கட்சியிடம் உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
காலியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
பொய் பிரசாரம்
மக்கள் விடுதலை முன்னணியும் ஜனாதிபதியும் ஒன்றிணைந்து பொய் பிரசாரங்களை முன்னெடுக்கின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எமது வெற்றி உறுதியாகியுள்ள நிலையில் முகநூல் மற்றும் வேறு இணையதளங்களுக்கு பணம் செலுத்தி செய்தி வெளியிடப்படுவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
நாம் சில தரப்புகளுடன் இணைந்து கொள்ளப் போவதாக இந்த செய்திகள் குறிப்பிட்ட போதிலும் அவற்றில் எந்த உண்மையும் கிடையாது என கூறியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி
எதிர்வரும் 21ஆம் திகதி ஐக்கிய மக்கள் சக்தி தேர்தலில் வெற்றி ஈட்டியதன் பின்னர் இந்த நாட்டின் 220 இலட்சம் பொதுமக்களுடன் இணைந்து கொள்ளுமே தவிர வேறு யாருடனும் இணைந்து கொள்ளாது என சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், தோல்வி அடைந்த ஊழல் மோசடிமிக்க அரசியல்வாதிகளுடன் கூட்டணி சேரப் போவதில்லை என சஜித் தெரிவித்துள்ளார்.
நாம் ஏதாவது தரப்புடன் இணைந்து கொள்ள வேண்டும் என ஜனாதிபதியும் தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பெரிதும் விரும்புகின்றனர் எனவும் அவ்வாறு விரும்பினால் அவர்கள் இணைந்து கொள்ள முடியும் எனவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.