ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்ட காலத்தில் அரசாங்கத்தில் மூன்றாம் தரத்தில் இருந்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக இருந்த ரஞ்சித் மத்தும பண்டார தொடர்பில் நிறைய இரகசியங்கள் சொல்ல வேண்டி இருப்பதாக சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
தகவல் திணைக்களத்தில் நேற்று(19) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“பாதுகாப்பு துணை அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகரவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வந்து விவாதம் நடத்தக் கோரினால், எங்களுக்கும் நிறைய சொல்ல வேண்டியுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களின் விபரம்
ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்ட போதும் அதன் பின்னர் அரசாங்கத்தை கொண்டு நடத்திய சஜித் மற்றும் அவரின் குழுவினர் மேற்கொண்ட விசாரணைகள், கைது செய்யப்பட்டவர்களின் விபரம் மற்றும் எண்ணிக்கை, குறித்த விசாரணைகளுக்கு நடந்தது என்ன என அனைத்தையும் எங்களுக்கு அவர்களிடம் கேட்க வேண்டியுள்ளது.

அவர்கள் அனைவரும் இணைந்து நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வர சொல்லுங்கள்.

இதற்கு முன்னர் நாம் நாடாளுமன்றில் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் தெரிவித்த கருத்துக்களுக்கு மேலதிகமாக பல கருத்துக்களை தெரிவிக்க வாய்ப்பிருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

