முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

விசாரணைகளை நடத்துவது குற்றப்புலனாய்வு பிரிவினரே : ஞானசார தேரருக்கு நளிந்த ஜயதிஸ்ஸ பதிலடி

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரிடம் குற்றப்
புலனாய்வுத் துறை அறிந்ததைத் தாண்டி, உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன்
சம்பந்தப்பட்ட பயங்கரவாதக் குழு தொடர்பான தகவல்கள் உள்ளன, எனவே அவற்றை அவர் குற்றப்புலனாய்வு துறையிடம் ஒப்படைக்க முடியும் என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

ஊடகங்களிடம் இந்த விடயத்தை குறிப்பிட்ட அவர், குற்றப்புலனாய்வுத்துறை இந்த
வலையமைப்பை வெளிக்கொணர ஒரு பாரிய நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாகக் கூறினார்.

தேசிய பாதுகாப்பின் நலன்

இந்த நிலையில், தேசிய பாதுகாப்பின் நலனுக்காக, தங்களிடம் உள்ள எந்தவொரு
தகவலையும் பாதுகாப்புப் படையினருடன் பகிர்ந்து கொள்ள அனைத்து குடிமக்களுக்கும்
பொறுப்பு உள்ளது என்று அவர் கூறினார்.

விசாரணைகளை நடத்துவது குற்றப்புலனாய்வு பிரிவினரே : ஞானசார தேரருக்கு நளிந்த ஜயதிஸ்ஸ பதிலடி | Nalinda Jayatissa Statement About Ganasara

இரண்டு ஊடக சந்திப்புகளில் பேசிய ஞானசார தேரர், தன்னிடம் உள்ள எந்தவொரு
தகவலையும் ஜனாதிபதி மற்றும் பாதுகாப்புச் செயலாளருடன் மட்டுமே பகிர்ந்து கொள்ள
முடியும் என்று கூறினார்.

ஜனாதிபதி விசாரணைகளை நடத்துவதில்லை

இருப்பினும், ஜனாதிபதி விசாரணைகளை நடத்துவதில்லை, குற்றப்புலனாய்வினரே
விசாரணைகளை மேற்கொள்கின்றனர் என்று அமைச்சர் ஜெயதிஸ்ஸ சுட்டிக்காட்டினார்.

விசாரணைகளை நடத்துவது குற்றப்புலனாய்வு பிரிவினரே : ஞானசார தேரருக்கு நளிந்த ஜயதிஸ்ஸ பதிலடி | Nalinda Jayatissa Statement About Ganasara

ஞானசார தேரர் ஏற்கனவே அரசாங்க புலனாய்வுத் துறையில் உள்ளவர்களை நன்கு
அறிந்தவர். எனவே, அவர் தனது தகவல்களை நேரடியாகவும் தெளிவாகவும் அவர்களுக்கு
வெளியிட முடியும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ
தெரிவித்தார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்