ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய தேசியக் கட்சியும் ஒன்றிணைவது நாட்டின் அரசியலுக்கு நல்லது என பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
“ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாஸ ஆகியோர் ஒன்றிணைய வேண்டும் என்பதை கடந்த
ஜனாதிபதித் தேர்தலின்போதே நான் கூறி இருந்தேன்.
ஒருமித்த கொள்கை
அவர்கள் ஒருமித்த கொள்கையைக்
கொண்ட கட்சிகளில் இருக்கின்றனர்.
அரசியல் ரீதியில் இணைவதற்கு எவ்வித தடையும் இல்லை.

அவ்வாறு இணைவது நல்லது.
இந்த இணைவானது எமக்குச் சவாலாக அமையாது. எமது கட்சியின் பயணம், எமது முகாமை
சேர்ந்தவர்களுடன் தொடரும்” எனத் தெரிவித்துள்ளார்.

