முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

விடுதலைப்புலிகள் இருந்திருந்தால் நிலைமை வேறு..! மறைக்கப்பட்ட விடயங்களை அம்பலப்படுத்திய நாமல்

நாட்டில் தற்போது நிலவும் தேசிய பாதுகாப்பு சூழலில் தமிழீழ விடுதலைப்புலிகள் இருந்திருந்தால் நடந்து வந்து துப்பாக்கி சூடு நடத்தியிருப்பார்கள் என்று மொட்டு கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மேலும் நாடு முழுதும் குண்டு வெடித்திருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ராஜபக்ச குடும்பம்

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

மகிந்த ராஜபக்ச காலத்தில் நாட்டின் முக்கியமான அமைச்சுக்கள் ராஜபக்ச குடும்பத்திடம் இருந்ததால் ஒன்றும் செய்யமுடியவில்லை என்று சிலர் குற்றம் சாட்டினார்.

விடுதலைப்புலிகள் இருந்திருந்தால் நிலைமை வேறு..! மறைக்கப்பட்ட விடயங்களை அம்பலப்படுத்திய நாமல் | Namal Rajapaksa Npp Podujana Peramuna

அனைத்தும் எம்மிடம் இருந்ததாலே நாம் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தோம். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவால் முடியாததை மேலும் ரத்வத்தையால் முடியாததை நாம் செய்துள்ளோம்.

தேசிய பாதுகாப்பு

தேசிய பாதுகாப்பு தொடர்பில் நாம் கதைப்பதென்றால் 2015 ஆம் ஆண்டிலிருந்து சில தகவல்களை வெளியிட்டாக வேண்டும்.

2015 ஆம் ஆண்டு முதல் எமது நாட்டின் அனைத்து புலனாய்வு துறைகளும் வலுவிழக்க செய்யப்பட்டன.

அதன் ஒரு பெரும் நிகழ்வே ஈஸ்டர் குண்டு தாக்குதலாகும்.

புலனாய்வு தகவல்கள்

பல தகவல் தெரிவிக்கப்பட்டும் கண்டு கொள்ளாத நிலைமையும் அந்த தகவல்களின் உண்மை தன்மையில் ஏற்பட்ட சந்தேகங்களும் தகவல்களை தட்டிவிட்டு போவதற்கான காரணமாகலாம்.

அதேபோல் கோட்டபாய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த சமயத்திலும் புலனாய்வு துறையினரால் வழங்கப்பட்ட பல தகவல்களை அவருடன் இருந்த அதிகாரிகள் நம்பிக்கை கொள்ளவில்லை.

அதற்கு புலனாய்வு துறையின் வலுவிழப்பும் நம்பகத்தைன்மையில் ஏற்பட்ட சந்தேகம் தான் காரணமாகலாம்.

விடுதலைப்புலிகள் இருந்திருந்தால் நிலைமை வேறு..! மறைக்கப்பட்ட விடயங்களை அம்பலப்படுத்திய நாமல் | Namal Rajapaksa Npp Podujana Peramuna

அத்தோடு அரகலய போராட்டத்தின் போது தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன.அதற்கும் இவை காரணங்களாக இருந்திருக்கலாம்.

ஜனாதிபதி அநுரவின் அரசாங்கத்திலும் அவ்வாறே இருக்கிறது.

ரேல் மோட்டார் சைக்கிளில் வந்த திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் கும்பல்கள் இன்று ஸ்கூட்டர்களில் வந்தே துப்பாக்கி பிரயோகங்களை செய்கின்றனர்.

புலனாய்வு தகவல்கள் கிரமாக கிடைக்கும் என்றால் தொடர் சூட்டு சம்பவங்கள் நடப்பதற்கான சூழலை முறியடித்திருக்கலாம் என்றார்.

கோட்டாபயவின் ஆட்சி கவிழ்ப்பு

கோட்டாபயவின் ஆட்சி கவிழ்ப்பு புவியல் அரசியல் செயற்பாட்டின் ‘ரெஜிம்’மாற்றமாகும்.

குறித்த ‘ரெஜிம்’ மாற்றம் 2009 ஆம் ஆண்டே ஆரம்பிக்கப்படுகிறது.

 ராஜபக்சவின் ஆட்சி கவிழ்ப்பு

டொனால்ட் ட்ரம்ப் ஆட்சியை கைப்பறிய போது USAID, (United States Agency for International Development)தெற்காசியாவில் ஆட்சி கவிழ்ப்புக்காக செலவழித்த தொகையை வெளியிட்டதில் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

2009 ஆம் ஆண்டே இந்த ரெஜிம் மாற்றம் என்ற நிகழ்ச்சி நிரல் ஆரம்பிக்கப்பட்டதாகும்.2010 ஆம் ஆண்டு எங்களின் இராணுவத் தளபதியை வெளியில் எடுத்தார்கள்.

விடுதலைப்புலிகள் இருந்திருந்தால் நிலைமை வேறு..! மறைக்கப்பட்ட விடயங்களை அம்பலப்படுத்திய நாமல் | Namal Rajapaksa Npp Podujana Peramuna

அதன் அடுத்த செயற்பாடாக எமது கட்சியில் இருந்த பொதுச் செயலாளரை 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக்கியமை. அதன் தொடர்ச்சியாக கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சி கவிழ்ப்பாகும்.

கோட்டாபய அட்சியின் போது பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது.

ஆனால் பங்களாதேஷின் ஆட்சி கவிழ்ப்பின் போது அந்நாட்டில் பொருளாதார நெருக்கடி இருக்கவில்லை.

பங்களாதேஷ் எமக்கும் கொரோனா தொற்றில் கடன் கொடுத்த நாடு.

இன்று சேக்ஹஷினாவுக்கு நாட்டுக்கு வரமுடியாத நிலை காணப்படுகிறது.

ஆனால் கோட்டாபய நாட்டுக்கு வந்தார்.சர்வாதிகார நாடுகளுக்கு அடிபணியாத நாடுகளில் இவ்வாறான ரெஜிம் மாற்றங்கள் ஏற்படுத்துவது தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் ஆட்சியை ஏற்றுக் கொண்டு காலத்தில் புத்தாண்டுக்கு விநியோகித்த எரிபொருள் விகிதத்திற்கும் அதிகமாக கொவிட் காலத்தில் விநியோகித்தார்.

ஆனால் வரிசைகள் உருவாக்கப்பட்டன இவையும் ஆட்சி மாற்றத்திற்கானதாகும்.

கோட்டபாய காலத்தில் எமது அரச இயந்தியரம் முறையாக இயங்கவில்லை.அத்தோடு சமூகத்தின் மனநிலையை எம்மால் அறிந்து கொள்வதற்கான சூழல் இருக்கவில்லை. மேலும் எமது விநியோக சங்கிலி விழந்ததும் முக்கிய காரணமாகும்.

 கட்சியின் தோல்வி

கண்டியில் நடைபெற்ற கார் ரேஸுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை.அதை நடத்தியது வேறு ஒரு கார் ஓட்டுனர்கள் சங்கமாகும்.நாங்கள் அக்காலத்தில் கார்ரேஸை ஆரம்பித்தபோதே முதலீட்டுக்கான விளையாட்டுக்கள் ஆரம்பிக்கப்பட்ட காலமாகும். அக்காலத்தில் அது மக்கள் மத்தியில் எடுபடவில்லை.அதனாலே நாம் அதை கைவிட்டோம்.

விடுதலைப்புலிகள் இருந்திருந்தால் நிலைமை வேறு..! மறைக்கப்பட்ட விடயங்களை அம்பலப்படுத்திய நாமல் | Namal Rajapaksa Npp Podujana Peramuna

 கட்சியின் தோல்விக்கு கடந்த ஆட்சி காலத்தில் இருந்த எமது தலைவர்கள் சில அரசியல் தீர்மானங்களை எடுக்க தவறிவிட்டனர்.2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வாக்காளர் அட்டையில் மொட்டு கட்சியின் சின்னம் கூட இருக்கக் கூடாது என்று சிலர் நினைத்தனர்.

எமது சிரேஷ்ட தலைவர்கள் அனைவரும் பின்வாங்கினர்.

நான் கட்சியை பாரமெடுப்பேன் என்று நினைத்துக்கு கூட பார்க்கவில்லை

மைதானத்தின் தளம் துடுப்பாட்டக் காரர்களுக்கு சாதகமாக இருக்கும் போது யாரும் துடுப்பெடுத்தாடலாம்.

ஆனால் சாதகமற்ற தளத்தில் இறங்குவதையே நான் விரும்புகிறேன். அதை நான் செய்தேன்.

பரம்பரை அரசியல்

ஜனாதிபதி தேர்தலில் 3 வீதம் இருந்த வாக்காளர் நிலையை உள்ளுராட்சி தேர்தலில் 10 வீதம் வரை அதிகரிக்க கிடைத்தது சாதனையாகும்.

பரம்பரை அரசியல்
எனது அப்பா ஜனாதிபதியாக இருந்தது எனக்கு அரசியலில் நுழைவதற்கு இலகுவானதாக இருந்தது.

விடுதலைப்புலிகள் இருந்திருந்தால் நிலைமை வேறு..! மறைக்கப்பட்ட விடயங்களை அம்பலப்படுத்திய நாமல் | Namal Rajapaksa Npp Podujana Peramuna

ஆனால் அரசியலில் நிலைப்பது கடினமானது.எமது அண்டை வலயத்தில் அவ்வாறான ஊதாரணங்கள் இருக்கிறது தந்தைக்கு பின்னர் மகன் ஜொலிக்கவில்லை.

ராஜிவ் காந்தியின் மகன் ராகுல் இன்று முயற்சிக்கிறார்.

அதனால் எனக்கே உரித்தான வழியில் செல்ல தீர்மானித்தேன். ஏனென்றால் தந்தையின் பார்வையிலேயே மகனை மக்கள் நோக்குவர்.

ஆனால் தந்தைக்கு இல்லாத நற் குணங்கள் மேலும் தந்தையிடம் இல்லாத கெட்ட குணங்கள் எனக்கு இருக்கலாம் அது மனிதனின் இயல்பாகும் என குறிப்பிட்டுள்ளார்.     

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.