முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவிற்கு உலக ரக்பி சம்மேளனம் விதித்த பெரிய அபராதத்தை இலங்கை இன்னும் செலுத்தி வருவதாக விளையாட்டுத் துறை அமைச்சர் சுனில் குமார தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் நேற்றைய(18.03.2025) அமர்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
நாமல் ராஜபக்ச ரக்பி விளையாடிய நாட்களில் நடந்த ஒரு சம்பவம் காரணமாக உலக ரக்பி சம்மேளனம் அவருக்கு அபராதம் விதித்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாரிய அபராதம்
2014ஆம் ஆண்டு ஒரு ரக்பி போட்டியின் போது ஃபிஜிய வீரர்கள் விளையாட்டு விதிமுறைகளை மீறி போட்டில் கலந்துகொண்டனர்.
இதனால், அவர்கள் ஆண்டுக்கு 50,000 ஸ்டெர்லிங் பவுண்டுகள்(ஏறத்தாழ 20 கோடி இலங்கை ரூபாய்கள்) அபராதம் செலுத்தி வருவதாக சுனில் குமார சுட்டிக்காட்டியுள்ளார்.