எதிர்க்கட்சித் தலைவரின் அழைப்பின் பேரில் நாளை (17) நடைபெறும் கலந்துரையாடலில் கலந்து கொள்வதாக சிறிலங்கா பொதுஜன பெரமுன அறிவித்துள்ளது.
குறித்த விடயத்தை சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற விவகாரக் குழு கூட்டத்தைத் தொடர்ந்து இன்று (16) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்ட விடயத்தை அவர் குறிப்பிட்டுள்ளார்.
கலந்துரையாடல்
இதன்படி, உள்ளூராட்சி நிறுவனங்களின் தலைவர்கள் நியமனம் தொடர்பான கலந்துரையாடல் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நாளை (16) நடைபெற உள்ளது.


