பாதாள உலகக் குழுக்களுக்கு முடிவு கட்டும் போர்வையில் மற்றுமொரு குழுவை
வளர்ப்பதற்கு முற்பட்டால் இந்த அரசின் கதை முடிந்துவிடும் என்று ஸ்ரீலங்கா
பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும், “பாதாள உலகக் குழுக்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பது நல்லது.
எனினும்,
இதற்குரிய நடவடிக்கை என்ற போர்வையில் மற்றுமொரு குழுவைக் கட்டியெழுப்ப
முற்பட்டால் இந்த நடவடிக்கை வெற்றியளிக்காது.
தேர்தலில் பதிலடி
மற்றுமொரு குழுவை உருவாக்குவதற்கு அரசு முற்படுகின்றது என்பதையே அதன்
செயற்பாடு வெளிப்படுத்துகின்றது.

அவ்வாறு நடந்தால் அரசும் முடிந்துவிடும்.
எனவே, பாதாள உலகக் குழுக்களுக்கு முற்றுபுள்ளி வைக்க வேண்டும் என்பதே எமது
நிலைப்பாடு.
தமது பொறுப்பை மறந்து இந்த அரசு செயற்பட்டு வருகின்றது. இதற்குரிய பதிலடி
அடுத்த தேர்தலில் வழங்கப்படும்” என்றார்.

