மனோஜ் பாரதிராஜா
இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களின் மகன் மனோஜ் பாரதிராஜா சில வாரங்களுக்கு உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.
மனோஜின் உயிரிழப்பை தாங்க முடியாமல் பாரதிராஜா மிகவும் உடைந்து காணப்பட்டார். தாஸ்மஹால் படத்தில் ஹீரோவாக அறிமுகமானவருக்கு முதல் படமே தோல்வியை கொடுத்தது.
அதன்பிறகு வருஷமெல்லாம் வசந்தம், சமுத்திரம், கடல் பூக்கள், ஈரநிலம், அல்லி அர்ஜுனா என தொடர்ந்து நடித்தார், பெரிய அளவில் வெற்றி என்பதை பார்க்கவில்லை.
பின் சாதூரியன் என்ற படத்தில் மனோஜ் நடிக்க அதில் நாயகியாக நடித்த நந்தனா மீது காதல் ஏற்பட இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.
தம்பதி பேட்டி
தற்போது மனோஜ் பாரதிராஜா மற்றும் நந்தனா இருவரும் சேர்ந்து கொடுத்த பழைய பேட்டி ஒன்று வலம் வருகிறது.
அந்த பேட்டியில் நந்தனா பேசும்போது, சாதூரியன் படப்பிடிப்பு முடிந்த பிறகு 24 மணி நேரமும் ஏழு நாட்களும் நாங்கள் ஒரு மாதம்வரை மெசேஜ்களை செய்துகொண்டே இருந்தோம்.
ஆனா ஒரு முறைகூட மனோஜ் எனக்கு ஃபோன் செய்யவே இல்லை.
ஆனால் ஒருமுறை கூட மனோஜ் எனக்கு ஃபோன் செய்யவே இல்லை, அவரது குரலை கேட்க வேண்டும் என்கிற ஏக்கத்தில் எனக்கு போன் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு தோன்றவில்லையா என கேட்டேன்.
உடனே அவரோ, எனக்கு எஸ்டிடி இல்லை என்று சொல்ல, பிறகுதான் எஸ்டிடியை ஆக்டிவேட் செய்து எனக்கு ஃபோன் செய்ய ஆரம்பித்தார் என்றார்.