நந்திதா ஸ்வேதா
பா.ரஞ்சித் இயக்கத்தில் அட்டகத்தி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் நந்திதா ஸ்வேதா.
முதல் படமே அவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுக்க விஜய் சேதுபதிக்கு ஜோடியாக இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் நடித்து பெரிய ரசிகர்கள் வட்டாரத்தை பெற்றார்.
இவரைப் பார்த்தாலே ரசிகர்களுக்கு சொல்லத் தோணும் வசனம், குமுதா ஹேப்பி அண்ணாச்சி தான். பின் எதிர்நீச்சல் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார், முண்டாசுப்பட்டி, உப்பு கருவாடு என சில படங்களே நடித்தார்.


தந்திரமாக டாஸ்கை வென்ற சாண்ட்ரா, அடுத்து என்ன?.. சூடுபிடிக்கும் பிக் பாஸ் சீசன் 9!
ஓபன் டாக்!
இந்நிலையில், தற்போது நந்திதா அவரது சினிமா பயணம் குறித்து பகிர்ந்த விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில், ” நான் ஒரு சினிமா வெறி பிடித்தவள். சிறுவயதில் இருந்தே சினிமா பைத்தியம் என்றுகூட சொல்லலாம். உனது ஆசை என்ன? என்று யார் கேட்டாலும், நடிகை ஆகப் போகிறேன் என கூறுவேன்.
சினிமாவில் எதுவும் நிரந்தரம் கிடையாது. ஒரு படம் ஹிட் அடித்ததும் நாம் பெரிய ஆள் என்று நினைத்து விடக் கூடாது. அதுதான் மிகப்பெரிய பொய். சினிமாவில் நான் கற்றுக்கொண்ட பெரிய பாடம் பொறுமை தான்.
வேண்டாம் என்று உதறித் தள்ளிய படங்கள் நிறைய வெற்றி பெற்றுள்ளன. ஆனால் அதற்காக வருத்தப்படவில்லை. முடிந்தது முடிந்தது தான், அதற்காக கவலைப்பட்டு இருப்பது முட்டாள்தனம்” என்று தெரிவித்துள்ளார்.


