நாசாவின் புகழ்பெற்ற விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தனது மூன்றாவது விண்வெளி பயணத்திற்கு தயாராகி வருகிறார்.
தனது மூன்றாவது விண்வெளி பயணத்தின் போது போயிங்கின் ஸ்டார்லைனர் (Boeing’s Starliner spacecraft) திட்டத்தின் பைலட்டாக அவர் இடம் பெற உள்ளார்.
நாசாவின் போயிங்கின் ஸ்டார்லைனர் திட்டத்தில் க்ரூ ஃப்ளைட் டெஸ்ட் மிஷனின் பைலட்டாக பயிற்சி பெற்று வருகிறார். இதன் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) சுனிதா வில்லியம்ஸ் செல்வது மூன்றாவது முறையாகும்.
நாசாவின் திட்டம்
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட நாசா, “இந்த திட்டத்தை மே மாதம் 6 ஆம் திகதி EDT நேரப்படி இரவு 10:34 மணிக்கு ஏவ திட்டமிட்டுள்ளோம்.
தீவிரமடையும் போர் நிலை! சீனாவுக்கு பயணம் செய்துள்ள அமெரிக்க இராஜாங்க அமைச்சர்
புளோரிடாவில் உள்ள கேப் கனாவெரல் ஸ்பேஸ் ஃபோர்ஸ் ஸ்டேஷனில் உள்ள விண்வெளி ஏவுதள வளாகம்-41ல் இருந்து உந்துகணை ஏவப்படும்.
நாசா விண்வெளி வீரர்களான புட்ச் வில்மோர் மற்றும் சுனிதா வில்லியம்ஸ் ஆகியோர் யுனைடெட் லாஞ்ச் அலையன்ஸ் அட்லஸ் V உந்துகணை மூலம் போயிங்கின் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏறிச் சென்று, சுற்றுப் பாதையில் செல்லும் ஆய்வகத்திற்கு செல்வார்கள்.
சுனிதா வில்லியம்ஸின் மூன்றாவது பயணம்
அங்கு அவர்கள் ஒரு வார காலம் தங்கி ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள். ஸ்டார்லைனர் விண்கலத்தின் முதல் க்ரூ திட்டம் இதுவாகும்” என தெரிவித்துள்ளது.
ஈரான் அமைச்சரை கைது செய்யுமாறு இலங்கையிடம் ஆர்ஜென்டினா கோரிக்கை!
விண்வெளித் துறையில்
சுனிதா வில்லியம்ஸ் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி உள்ளார். விண்வெளியில் வெற்றிகரமாக ஸ்பேஸ் வாக் செய்துள்ளார்.
ஏற்கனவே இரண்டு முறை சர்வதேச விண்வெளி நிலையம் சென்று ஆய்வு செய்த அனுபவம் கொண்ட சுனிதா வில்லியம்ஸ், தற்போது மூன்றாவது முறையாகவும் விண்வெளியி செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
16 ஆண்டுகளின் பின்னர் இலங்கை வந்த ஈரான் அதிபர்! ரணிலுடன் இடம்பெற்ற சந்திப்பு
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |