முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஜனாதிபதி ரணில் கல்வியின் முக்கியத்துவத்தை நன்கு உணர்ந்தவர்: வடமேல் மாகாண ஆளுநர்

Courtesy: uky(ஊகி)

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) கல்வியின் முக்கியத்துவத்தை தெளிவாக உணர்ந்துள்ளதால், அதற்கான நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட விடயங்களில் கூடுதல் கரிசனையுடன் செயற்படுவதாக வடமேல் மாகாண ஆளுநர் நஸீர் அஹமட் (Naseer Ahamad) சுட்டிக்காட்டியுள்ளார்.

குருநாகல் நகர மண்டபத்தில் நேற்று (27.06.2024) இடம்பெற்ற, வடமேல் மாகாணத்தின் 1671 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

இதன்போது அவர் மேலும் உரையாற்றுகையில், 

“இலங்கையில் இரண்டு வருடங்களுக்கு முன்னர் எரிபொருள், எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு கூட கடுமையான தட்டுப்பாடு நிலவியது.

தொழில்வாய்ப்புக்கள்  

மின்சாரம் இன்றி மக்கள் மணிக்கணக்கில் அவதிப்பட்டார்கள். ஆனால், இன்று அந்த நிலை மாறியுள்ளது. அனைத்து அத்தியாவசியப் பொருட்களும், தட்டுப்பாடு இன்றி தாராளமாக கிடைக்கின்றன.

ஜனாதிபதி ரணில் கல்வியின் முக்கியத்துவத்தை நன்கு உணர்ந்தவர்: வடமேல் மாகாண ஆளுநர் | Naseer Ahamad Spoke About Ranil

மேலும், வரிசை யுகங்கள் மறைந்து நாடு ஓரளவுக்கு சுபீட்சமடைந்துள்ளது. மறுபுறத்தில் நாட்டில் ஏற்பட்டுள்ள சுபீட்ச நிலை காரணமாக தொழில்வாய்ப்புக்களை வழங்குவதற்கான நிதி ஒதுக்கீடுகள் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்றன.

அதன் காரணமாக தற்போது தொழில் வரிசைகள் உருவாகியுள்ளன. அதன் ஒரு கட்டமாகவே இன்று உங்களுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாத காலத்திற்குள்ளாக நாங்கள் 4200 பட்டதாரி ஆசிரியர் நியமனங்களை வழங்கியுள்ளோம்.

அதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தினால் இன்னும் சிறிது காலத்திற்குள் தொழில் வரிசைகளும் இல்லாது ஒழிக்கப்படும்.

ஆசிரியர்களின் பொறுப்பு 

தகுதி வாய்ந்த அனைவருக்கும் தொழில்வாய்ப்புக்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

ஜனாதிபதி ரணில் கல்வியின் முக்கியத்துவத்தை நன்கு உணர்ந்தவர்: வடமேல் மாகாண ஆளுநர் | Naseer Ahamad Spoke About Ranil

அதன் இன்னொரு கட்டமாக வடமேல் மாகாணத்தின் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்பும் வகையில் இன்னும் 1500 பேருக்கு விரைவில் ஆசிரியர் நியமனம் வழங்க உள்ளோம். அதற்கான வயது எல்லையை 35 – 40 வரை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

மேலும், நாட்டின் எதிர்காலம் கல்வி கற்ற சமூகத்தின் கைகளில் தங்கியுள்ளது என்பது அனைவரும் அறிந்த உண்மை. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கல்வியின் முக்கியத்துவத்தைத் தெளிவாக உணர்ந்துள்ளார். அதன் காரணமாக கல்வி மேம்பாட்டுக்கான நடவடிக்கைகளுக்கு தாராளமாக நிதி ஒதுக்கீடு செய்து வருகின்றார்.

அவரின் கல்விக் கொள்கையை அடியொட்டி, வடமேல் மாகாணத்தின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதில் நாங்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு கொண்டிருக்கின்றோம்.

மாணவர்களின் கல்வி வளர்ச்சி

மேலும், வடமேல் மாகாணத்தை, நாட்டின் ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடுகையில் முன்னணி மாகாணமாக முன்னேற்றுவதே எமது இலக்காகும்.

ஜனாதிபதி ரணில் கல்வியின் முக்கியத்துவத்தை நன்கு உணர்ந்தவர்: வடமேல் மாகாண ஆளுநர் | Naseer Ahamad Spoke About Ranil

அதற்கான முக்கிய பொறுப்பு, இன்று பட்டதாரி ஆசிரியர்களாக நியமனம் பெறும் உங்கள் கைகளில் தங்கியுள்ளது. எதிர்கால சந்ததியினரை, நாட்டின் எதிர்கால தலைவர்களை தயார்படுத்தும் பாரிய பொறுப்பு உங்களுக்கு உள்ளது.

அதனை உரிய முறையில் மேற்கொண்டு, மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உரிய பங்களிப்பை வழங்க வேண்டும். மாணவர்களுக்கு சிறந்த வழிகாட்டிகளாக ஆசிரியர்கள் செயற்பட வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளை, இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர்களான சாந்த பண்டார, அசோக பிரியந்த, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண கல்வி அமைச்சு, பொதுச்சேவைகள் ஆணைக்குழு என்பவற்றின் செயலாளர்கள் மற்றும் மாகாணக் கல்விப் பணிப்பாளர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர். 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.