முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தமிழரசு கட்சிக்கு பேரிழப்பாக மாறிய மாமனிதர் ரவிராஜின் படுகொலை : தமிழர் தரப்பு ஆதங்கம்

சிங்கள பேரினவாத்ததால் சுட்டுபடுகொலை செய்யப்பட்ட நடராஜா ரவிராஜ் (Nataraja Raviraj) உயிருடன் இருந்திருந்தால் தமிழரசு கட்சி நீதிமன்றம் வரை சென்றிருக்க வேண்டிய நிலை வந்திருக்காது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் (P. Arianetheran) தெரிவித்துள்ளார்.

அத்தோடு, நடராஜா ரவிராஜ் உயிரோடு இருந்து இருந்தால் அவரே நிச்சயமாக தமிழரசு கட்சியின்தலைவராக இருந்து இருப்பார் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “நடராஜா ரவிராஜ் அவர்கள் உயிருடன் இருந்திருந்தால் 25 ஜூன் அன்று அவருக்கு 62 வயதாகும் ஆனால், கடந்த 2006 நவம்பர் 10 ஆம் திகதி அவரது 44 ஆவது வயதில மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) அதிபராக இருந்த காலத்தில் சிங்கள பேரினவாதத்தால் திட்டமிட்டு அவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சோகம் கொழும்பில் (Colombo) அரங்கேறியது.

தமிழரசு கட்சியின் மகாநாடு

அவர் இன்று இருந்திருந்தால் 17 ஆவது இலங்கைத் தமிழரசு கட்சியின் மகாநாடு எந்த இடையூறுகள் மற்றும் குத்து வெட்டுகள் இன்றி அவரே தலைவராக நிச்சயமாக பேராதரவுடன் தெரிவாகி இருப்பார்.

தமிழரசு கட்சிக்கு பேரிழப்பாக மாறிய மாமனிதர் ரவிராஜின் படுகொலை : தமிழர் தரப்பு ஆதங்கம் | Nataraja Raviraj Shot Dead By Sinhalese Chauvinism

தனது மக்களின் விடிவிற்காக தனது உயிரையே கொடுக்க தயாராக இருந்த ஒரு தலைவர் மத்தியில் இன்று தங்களுடைய தங்களுடைய சுய நலனுக்காக நடிப்பு அரசியல் செய்து வாக்கு வங்கிகளையும் நிரப்பும் நோக்கில் செயற்படும் தமிழ்தேசிய அரசியல் வாதிகள் கட்சியின் தலைவர்கள் மாமனிதர் ரவிராஜ் அவர்களின் அரசியல் பயணத்திலிருந்து இருந்து பெற வேண்டிய பெறுமதியான படிப்பினைகளை உள்வாங்குவதில் தவறிவிட்டார்கள்.

தமிழ்த் தேசிய அரசியல்

இன்று தமிழரசுக்கட்சியை நீதிமன்றில் நிறுத்திய நிலைமை அவர் இருந்திருப்பின் ஏற்பட்டிருக்காது அத்தோடு தமிழ்த் தேசிய அரசியல் செயற்பாடுகள் உயிர்புடன் ஒற்றுமையாக முன்நோக்கி சென்றிருக்கும் என்பதில் எந்த மாற்றுக்கருத்துகளும் இருந்திராது.

தமிழரசு கட்சிக்கு பேரிழப்பாக மாறிய மாமனிதர் ரவிராஜின் படுகொலை : தமிழர் தரப்பு ஆதங்கம் | Nataraja Raviraj Shot Dead By Sinhalese Chauvinism

அவர் தந்தை செல்வாவின் அகிம்சைப்போராட்ட அரசியலையும் தலைவர் பிரபாகரனின் (Velupillai Prabhakaran) ஆயுதப்போராட்ட அரசியலையும் நேசித்தார்” என அவர் தெரிவித்துள்ளார்.  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.