2023ம் வருடத்திற்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வருடம் வந்த சிறந்த படங்களுக்கு விருதுகள் வழங்கப்படுகிறது.
சிறந்த தெலுங்கு படமாக பகவந்த் கேசரி படம் தேர்வாகி இருக்கிறது. இந்த படத்தின் ரிமேக் தான் விஜய் தற்போது நடித்து வரும் ஜனநாயகன் படம் என கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

விருதுகள்
சிறந்த தமிழ் படமாக பார்க்கிங் படம் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஹரிஷ் கல்யாண் மற்றும் எம்.எஸ்.பாஸ்கர் நடித்து இருந்த பார்க்கிங் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்ப்பை பெற்ற ஒன்று. அதற்கு விருது கிடைத்து இருப்பதற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
மேலும் சிறந்த திரைக்கதைக்காகவும் பார்க்கிங் படத்திற்கு இரண்டாவது விருது கிடைத்து இருக்கிறது.
சிறந்த இசையமைப்பாளராக ஜீ.வி.பிரகாஷுக்கு விருது அறிவிக்கப்பட்டு இருக்கிறது. வாத்தி படத்திற்காக அவர் விருது வாங்குகிறார்.


