Courtesy: Sivaa Mayuri
கொழும்பு தேசிய நூலக வளாகத்தில் வைத்து, தேசிய மக்கள் சக்தி ஆதரவாளர்களுக்கும், தேசியவாத அமைப்பு என கூறிக்கொள்ளும் குழுவிற்கும் இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில் இன்று விசாரணைகள் நடத்தப்படவுள்ளன.
விசாரணைகளை மேற்கொண்ட கறுவாத்தோட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளுக்காக இன்று இரண்டு குழுக்களையும் அழைத்துள்ளனர்.
தேசியவாத அமைப்பான தேசபிரேமி ஜாதிக பெரமுன என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்த பொது மாநாட்டின் போதே கடந்த வியாழக்கிழமை இந்த மோதல் ஏற்பட்டது.
தேசிய மக்கள் சக்தி
இதன்போது தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் என்று கூறப்படும் நான்கு உறுப்பினர்கள் கூட்டத்திற்கு இடையூறு விளைவித்ததாகவும், இதனையடுத்தே மோதல் ஏற்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில், தேசிய மக்கள் சக்தியின் நான்கு உறுப்பினர்கள் காயமடைந்தனர், ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
அனைத்து ஜனாதிபதி தேர்தல் பிரதான வேட்பாளர்களும் நாட்டை பிளவுபடுத்தும் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதாகவும், பௌத்தத்தை அழிக்கவும், போர் வீரர்களை காட்டிக்கொடுக்க தயாராக இருப்பதாகவும் வலியுறுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்விலேயே மோதல் இடம்பெற்றுள்ளது.