நடிகர் அல்லு அர்ஜுன் தற்போது இந்திய அளவில் உச்சத்தில் இருக்கும் நடிகர். அவரது படங்கள் ஆயிரம் கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்து வருகின்றன.
அடுத்து அவர் அட்லீ இயக்கும் படத்தில் நடிக்கிறார். அந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் ரூ.600 கோடிக்கும் மேலான பட்ஜெட்டில் எடுக்க இருக்கிறதாம்.
எந்த தமிழ் ஹீரோவை நம்பியும் இவ்வளவு பெரிய தொகையை தயாரிப்பாளர் யாருமே முதலீடு செய்ய முன்வரவில்லையே என சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் விவாதத்தை கிளப்பி இருக்கிறார்கள்.
அல்லு அர்ஜுனிடம் விருது வாங்க மறுத்த நயன்தாரா
இப்போது உச்சத்தில் இருக்கும் அல்லு அர்ஜுனை நடிகை நயன்தாரா பல வருடங்களுக்கு முன்பு மேடையிலேயே அசிங்கப்படுத்தியதாக சர்ச்சை வந்தது உங்களுக்கு தெரியுமா.
2016ல் ஒரு விருது விழாவில் நயன்தாராவுக்கு அல்லு அர்ஜுன் விருது கொடுக்க மேடைக்கு வந்தார். ஆனால் நயன்தாரா அவரிடம் வாங்க மறுத்து நானும் ரவுடி தான் இயக்குனர் விக்னேஷ் சிவன் கையால் தான் வாங்குவேன் என கூறிவிட்டார்.
அல்லு அர்ஜுன் அதனால் விலகி சென்றுவிட்டார். நயன்தாரா தனது காதலர் மீது இருக்கும் அக்கறையை காட்ட அல்லு அர்ஜுனை அசிங்கப்படுத்திவிட்டார் என அப்போது அவரது ரசிகர்கள் இணையத்தில் வறுத்தெடுத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.