நயன்தாரா
நயன்தாரா இன்று இந்திய சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளார். ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிப்பது மட்டுமின்றி சோலோ ஹீரோயினாகவும் கலக்கிக்கொண்டு இருக்கும் நயன்தாரா, சமீபத்தில் தன்னை இனிமேல் லேடி சூப்பர்ஸ்டார் என அழைக்கவேண்டாம் என அறிவிப்பை வெளியிட்டார்.
இது அவருடைய ரசிகர்களுக்கு சற்று வருத்தத்தை கொடுத்துள்ளது. நயன்தாரா நடிப்பில் அடுத்ததாக வெளிவரவிருக்கும் திரைப்படம் டெஸ்ட். இப்படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிடுகின்றனர். மேலும் மூக்குத்தி அம்மன் 2 படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பிரம்மாண்டமாக துவங்கியுள்ளது. இதுமட்டுமின்றி ராக்காயி, hi, மண்ணாங்கட்டி, dear students என பல திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார்.
நடிகர் மணிகண்டன் வாழ்க்கையில் இப்படி நடந்ததா.. 4 வருடம் இவ்வளவு கஷ்டத்தை அனுபவித்தாரா
படப்பிடிப்பில் நடந்த சம்பவம்
தனது ஆரம்பகால சினிமா வாழ்க்கையில் மலையாளத்தில் நடித்து வந்த நயன்தாரா, சரத்குமாரின் ஐயா படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த நிலையில், இப்படத்தின் முதல் நாள் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட சம்பவம் குறித்து சரத்குமார் பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளார்.
இதில், “ஐயா படத்துல நயன்தாரா முதல் நாள் வரும் போது, நயன்தாரா பயங்கர மாடர்ன் ட்ரெஸ்ல் வந்து இறங்குனாங்க. ஹரி பாத்துட்டு நயந்தாரா கூட்டிட்டு போங்கய்யான்னு தொரத்துறாரு. இவங்க தான் இந்த படத்துக்கு ஹீரோயின்னா செட்டே ஆகுது, சாய்ங்காலம் காஸ்ட்யூம் கொடுத்து பாக்கலாம்னு சொன்னார்” என அவர் கூறியுள்ளார்.