நடிகை நயன்தாரா தற்போது மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நடித்து வருகிறார். சுந்தர் சி இயக்கத்தில் அந்த படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.
மேலும் தற்போது தெலுங்கில் சிரஞ்சீவி ஜோடியாக Mana Shankara Vara Prasad Garu என்ற படத்திலும் அவர் நடித்து வருகிறார். இந்நிலையில் நயன்தாரா தற்போது மேலும் ஒரு புது தெலுங்கு படத்தில் ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்.

பாலகிருஷ்ணா
நடிகர் பாலகிருஷ்ணா அடுத்து கோபிசந்த் இயக்கத்தில் நடிக்க இருக்கும் படத்தில் ஹீரோயினாக நடிக்க நயன்தாராவை அணுகி இருக்கின்றனர்.
அவரும் இந்த வரலாற்று கதையில் நடிக்க ஓகே சொல்லிவிட்டாராம். அதனால் நயன்தாரா தெலுங்கில் தான் இனி அதிகம் பிசியாக இருக்க போகிறார்.


