நயன்தாரா-விக்னேஷ்
நடிப்பில் பிஸியாக இருந்தாலும் தனது சொந்த தொழிலிலும் மாஸ் காட்டி வருகிறார் நயன்தாரா.
திருமணத்திற்கு பிறகு விக்னேஷ் சிவனுடன் இணைந்து நிறைய புதிய தொழில்களை தொடங்கி அசத்தி வருகிறார்.
புதிய ஸ்டுடியோ
தற்போது நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து சென்னை தேனாம்பேட்டை வீனஸ் காலணியின் புதிதாக ஹோம் ஸ்டுடியோ ஒன்றை தொடங்கியுள்ளார்கள்.
சுமார் 7 ஆயிரம் சதுர அடி பரப்பில் இருந்த பங்களாவை நிகிதா ரெட்டி என்ற பிரபலத்தின் உதவியால் ஸ்டுடியோவாக வடிவமைத்திருக்கிறார்களாம்.
தங்களது பிஸ்னஸ் மீட்டிங், ஓய்வு நேரம், நண்பர்கள் சந்திப்பு போன்ற நிகழ்வுகளுக்கு அவர்கள் இந்த ஸ்டுடியோவை பயன்படுத்துவார்களாம்.
இந்த ஸ்டுடியோ அதிக வெளிச்சம் வரும்படியான கட்டமைப்பு, பல கைவிணைப் பொருட்களால் அலங்கரிக்கப்பட்ட அறைகள் , விசாலமான மாடி என இந்த ஸ்டுடியோ செம கிளாஸாக உருவாக்கப்பட்டுள்ளது.
View this post on Instagram