முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

4 கோடி ரூபாய் கடன்.. நடுத்தெருவில் கணவருடன் நின்ற நடிகை நீலிமா ராணி!

நீலிமா ராணி

சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை இரண்டிலும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நீலிமா ராணி. இவர் தாமரை, செல்லமே, வாணி ராணி, கோலங்கள், மெட்டி ஒலி போன்ற பல சீரியல்களில் நடித்துள்ளார்.

4 கோடி ரூபாய் கடன்.. நடுத்தெருவில் கணவருடன் நின்ற நடிகை நீலிமா ராணி! | Neelima Rani Talk About Difficult Days Of Her Life

மேலும் நான் மகான் அல்ல, பண்ணையாரும் பத்மினியும் உள்ளிட்ட படங்களிலும் நடித்திருக்கிறார். இந்த நிலையில், நடிகை நீலிமா ராணி தனது வாழ்க்கையின் கடினமான நாட்கள் குறித்து சமீபத்தில் வெளிப்படையாக பேசியுள்ளார்.

4 கோடி ரூபாய் கடன்

இதில் “நானும் என் கணவரும் இணைந்து ரூ. 4 கோடி பட்ஜெட்டில் படம் எடுக்க முடிவு செய்தோம். அதற்காக வெளியில் வட்டிக்கு பணம் வாங்கி, அப்படத்தை தயாரித்தோம். ஆனால், அந்த படம் நினைத்தது போல் சரியாக வரவில்லை. இறுதியில் அந்த படத்தை குப்பையில் தான் போட்டோம். அந்த படத்திற்காக கடன் வாங்கி நடுத்தெருவில் நின்றோம்.

சரி இழந்தாச்சு, ரோட்டுக்கு வந்தாச்சு இனி இங்கிருந்து எப்படி நகர போகிறோம் என நானும் என் கணவரும் யோசித்தோம். அந்த சமயத்தில் மீண்டும் சின்னத்திரையில் நடிக்க துவங்கினேன். வாணி ராணி, தாமரை, தலையணை பூக்கள் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வந்தேன்.

நடிகை மாளவிகா மோகனன் அம்மாவை பார்த்திருக்கிறீர்களா? அழகிய ஸ்டில்கள்

வாடகை வீட்டிற்கு கூட போக முடியாமல், என் கணவரின் நண்பர் வீட்டில் ஒரு அறையில் தங்கியிருந்தோம்.

எங்களுடைய குறிக்கோள் வெற்றிபெற வேண்டும் என்று இருந்தால், தோல்வியையும் ஏற்றுக்கொள்ள தயாராக இருந்தோம்.

4 கோடி ரூபாய் கடன்.. நடுத்தெருவில் கணவருடன் நின்ற நடிகை நீலிமா ராணி! | Neelima Rani Talk About Difficult Days Of Her Life

அதனால்தான், மீண்டும் அந்த இடத்தை எங்களால் பிடிக்க முடிந்தது. 2017ல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் என்றென்றும் புன்னகை, நிறைமாறாத பூக்கள் ஆகிய சீரியல்களை தயாரித்தோம்.

எங்களுடைய குறிக்கோள் சினிமா தயாரிப்பதாக இருந்தாலும் கூட, சீரியலையே முதலில் தயாரித்தோம்.

எனினும், கண்டிப்பாக ஒரு நாள் படம் தயாரிப்போம். எனவே நாம் சோர்ந்து போய் உட்கார்ந்தால் யாரும் நமக்கு கை கொடுக்க வரப்போவது இல்லை. நமக்கு நாமே தான் கை கொடுத்து உதவிக்கொள்ள வேண்டும்” என நீலிமா ராணி கூறியுள்ளார்.  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்