நெல்சன் திலீப்குமார்
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த பிரபலங்களில் ஒருவர் நெல்சன் திலீப்குமார். நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
ஆனால், இதற்கு முன் சிம்புவை வைத்து வேட்டை மன்னன் எனும் படத்தை இயக்கினார். ஆனால், அப்படம் கைவிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. கோலமாவு கோகிலா படத்தின் வெற்றியை தொடர்ந்து டாக்டர், பீஸ்ட், ஜெயிலர் என தொடர்ந்து முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து பணிபுரிந்தார்.


குட் பேட் அக்லி, தக் லைஃப் படத்தின் மொத்த வசூலை ஒரே நாளில் தாண்டிய குபேரா.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்
இதில் பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் நல்ல வரவேற்பை பெற்றது. கடைசியாக இவர் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் படம் தமிழ் சினிமாவின் இண்டஸ்ட்ரி ஹிட் படமானது. இதை தொடர்ந்து தற்போது ஜெயிலர் 2 படத்தை இயக்கி வருகிறார். மேலும் வெற்றிமாறன் – சிம்பு படத்தில் நடிகராகவும் அறிமுகமாகியுள்ளார்.
நெல்சன் திலீப்குமாரின் பிறந்தநாள்
இன்று இயக்குநர் நெல்சன் திலீப்குமாரின் பிறந்தநாள் ஆகும். தனது 41வது பிறந்தநாளை கொண்டாடி வரும் இயக்குநர் நெல்சன் திலீப்குமாருக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், இதுவரை அவர் இயக்கிய படங்களின் வசூல் விவரம் குறித்து பார்க்கலாம் வாங்க.
-
கோலமாவு கோகிலா – ரூ. 60+ கோடி
-
டாக்டர் – ரூ. 106 கோடி
-
பீஸ்ட் – ரூ. 207+ கோடி
-
ஜெயிலர் – ரூ. 635 கோடி

