பிரியா பவானி ஷங்கரின் பிறந்தநாள்
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருக்கும் பிரியா பவானி ஷங்கரின் 35வது பிறந்தநாள் இன்று. ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து இன்று, ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துள்ளார் பிரியா பவானி ஷங்கர். இவர் நடிப்பில் இந்த ஆண்டு இந்தியன் 2, ரத்னம், டிமான்டி காலனி 2, ப்ளாக் ஆகிய படங்கள் தமிழில் வெளிவந்தது. இதில் டிமான்டி காலனி 2, ப்ளாக் ஆகிய படங்கள் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது.
சொத்து மதிப்பு
இந்த நிலையில், பிஸியான நடிகைகளில் ஒருவராக இருக்கும் பிரியா பவானி ஷங்கரின் பிறந்தநாளான இன்று, அவருடைய சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது, அதை பற்றி பார்க்கலாம் வாங்க.
நடிகர் தனுஷுக்கு உடல்நிலை சரியில்லையா? என்ன ஆனது
நடிகை பிரியா பவானி ஷங்கர் ஒரு படத்தில் நடிப்பதற்காக ரூ. 30 லட்சம் சம்பளம் வாங்கி வருகிறார் என சொல்லப்படுகிறது. இவரிடம் ரூ. 50 லட்சம் மதிப்புள்ள BMW X1 கார் மற்றும் காண்டோ கார் இருக்கிறதாம்.
மேலும் கடற்கரை ஓரமாக இவருக்கு சொந்தமாக வீடு ஒன்று உள்ளது. மேலும் பிரியா பவானி ஷங்கரின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 10 கோடி இருக்கும் என தகவல் கூறுகின்றனர். ஆனால், இவை யாவும் அதிகாரபூர்வமான தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.