இஸ்ரேல் (Israel) பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) வீட்டின் முன்னே உள்ள தோட்டப் பகுதியில் தீப்பிழம்புகளை உருவாக்கும் வெடிகுண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இஸ்ரேல் பிரதமரின் வீட்டின் மீது கடந்த ஒக்டோபர் மாதம் ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்தப்பட்டது.
இதற்கு ஹிஸ்புல்லா (Hezbollah) அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டது. இஸ்ரேலுக்கும் ஹமாஸ் (Hamas) அமைப்பினருக்கும் இடையே ஓராண்டிற்கும் மேலாக போர் நீடித்து வருகிறது.
ஹிஸ்புல்லா
ஹமாஸ் அமைப்பினரை முற்றிலுமாக ஒழித்து கட்டும் வரை ஓய மாட்டோம் எனக் கூறியுள்ள இஸ்ரேல், காசா மீது தாக்குதலை முன்னெடுத்து வருகிறது.
இந்த போரில் ஹமாஸ் இயக்கத்தினருக்கு ஆதரவாக லெபானில் உள்ள ஹிஸ்புல்லா அமைபினரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
இதனால், ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்தும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.
வீட்டின் மீது தாக்குதல்
இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இல்லத்தில் மீண்டும் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.
மத்திய இஸ்ரேலில் உள்ள சிசேரியா நகரத்தில் நெதன்யாகு வீட்டிற்கு வெளியே உள்ள முற்றத்தில் ஃப்ளேர்ஸ் எனப்படும் தீப்பிழம்புகள் கிளம்பும் Flash Bomb விழுந்து தீ பற்றி எரிந்துள்ளது.
இது தொடர்பான காட்சிகள் தற்போது சமூக வளைத்தளங்களில் வெளியாகி பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தாக்குதல் மிகவும் தீவிரமான விஷயம் எனவும் ஆபத்தை அதிகரிக்கும் செயல் எனவும் இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளதுடன் இது தொடர்பாக விசாரணையும் இஸ்ரேல் பாதுகாப்பு படை மேற்கொண்டு வருகிறது.
எனினும், இந்த தாக்குதலுக்கு பின்னணியில் யார் உள்ளனர் என்ற விவரம் தற்போது வரை வெளியாகவில்லை.
https://www.youtube.com/embed/MyZZG1vEi5w