முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாராச்சியை கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதி வழங்கியுள்ளது.
28 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் மற்றும் உடைமைகளைச் சட்டவிரோதமாக சம்பாதித்ததாக சந்தேகத்தின் பேரில் கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இதன்படி, சந்தேகநபரை ரூபா 50,000 ரொக்கப் பிணை மற்றும் ரூபா 10 இலட்சம் பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளின் செல்ல நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

வெளிநாட்டு பயணங்களுக்கு தடை
இதேவேளை சந்தேக நபரின் வெளிநாட்டுப் பயணங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் அடுத்த தவணை விசாரணையை ஜனவரி மாதம் 16 ஆம் திகதிக்கு நீதவான் ஒத்திவைத்துள்ளார்.

