ஜீ தமிழ்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த சில வாரங்களுக்கு முன் புதியதாக தொடங்கப்பட்ட தொடர்கள் கெட்டி மேளம் மற்றும மனசெல்லாம்.
இதில் கெட்டி மேளம் தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது, கதைக்களமும் விறுவிறுப்பின் உச்சமாக ஒளிபரப்பாகி வருகிறது.
1 மணி நேரம் தினமும் ஒளிபரப்பாகும் இந்த தொடரில் பொன்வண்ணன் சிவராமன் என்ற கதாபாத்திரத்திலும் பிரவீனா, லட்சுமி என்ற வேடத்தில் நடிக்கிறார்கள்.
சிவராமன்-லட்சமி, நடுத்தர குடும்பத்தை சேர்ந்த இவர்கள் ஒரு புதிய வீடு கட்டி தனது மகள்களுக்கு நன்றாக திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற கனவில் வாழ்கிறார்கள்.
இதில் சாயா சிங், சௌந்தர்யா ரெட்டி, சிப்பு சூர்யன் மற்றும் விராட் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
மாற்றம்
தற்போது இந்த தொடரில் ஒரு கதாபாத்திரத்தின் நடிகர் மாற்றம் நடந்துள்ளது. அதாவது கவின் கதாபாத்திரத்தில் நடித்துவந்த ஷங்கரேஷ் விலகியுள்ளார். அவருக்கு பதில் இனி கவினாக க்ரிஸ்டி தான் நடிக்க உள்ளாராம்.
இதோ அவரது புகைப்படம்,
View this post on Instagram