Courtesy: Sivaa Mayuri
இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவையை எதிர்வரும் திங்கட்கிழமை நியமிப்பார் என அந்த கட்சியின் மூத்த பேச்சாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
இந்த அமைச்சரவை 25 அல்லது அதற்கு குறைவான அங்கத்தவர்களையே கொண்டிருக்கும்.
கடந்த வியாழக்கிழமையன்று நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்று, மொத்தம் 159 இடங்களைக் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.
அரசாங்கத்தின் கொள்கை
இந்தநிலையில், 2024 பொதுத் தேர்தலின் மூலம் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களை உள்ளடக்கிய பத்தாவது நாடாளுமன்றத்தின் ஆரம்ப அமர்வு 2024 நவம்பர் 21ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதன்போது, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தமது அரசாங்கத்தின் கொள்கை உரையை நிகழ்த்துவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.