முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

புதிய அரசமைப்புக்கான வேலைத்திட்டம் ஆரம்பம் : நாடாளுமன்றில் பிரதமர் தெரிவிப்பு

புதிய அரசமைப்புக்கான ஆரம்பகட்ட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
எமது ஆட்சிக் காலத்துக்குள் புதிய அரசமைப்பு திருத்தங்களை மேற்கொள்வோம் என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில்,
புதிய அரசமைப்பு திருத்தம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற
உறுப்பினர் அஜித் பி பெரேரா எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே பிரதமர்
மேற்கண்டவாறு கூறினார்.

ஒழுங்குவிதிகளில் திருத்தங்கள் 

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

புதிய அரசமைப்பு ஒன்று நாட்டுக்குத் தேவையாகும். அது இந்த நாட்டின்
அடிப்படைச் சட்டமாகும். அதனால் அதில் திருத்தம் மேற்கொள்ளும்போது அது
தொடர்பில் ஆராயாமல், விசேட நிபுணர்களுடன் கலந்துரையாடாமல், பிரஜைகள்
குழுக்களின் கருத்துக்களுக்குச் செவிசாய்க்காமல் குறுகிய காலத்தில்
மேற்கொள்வது சாத்தியப்படாத ஒன்றாகும்.

புதிய அரசமைப்புக்கான வேலைத்திட்டம் ஆரம்பம் : நாடாளுமன்றில் பிரதமர் தெரிவிப்பு | New Constitution Of Sri Lanka

விசேடமாக தற்போது இருக்கும் சில கட்டளைகள், சட்டங்கள், ஒழுங்குவிதிகளில்
திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டி இருக்கின்றன.

அதனால் எமது அரசு அது
தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதன் பிரகாரம் புதிய
அரசமைப்பு திருத்தம் தொடர்பான ஆரம்பகட்ட வேலைத்திட்டங்கள்
ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அரசு புதிய அரசமைப்பு திருத்தம் மேற்கொள்ளும்போது அனைத்து தரப்பினருடன்
கலந்துரையாடி, அனைத்து தரப்பினருக்கும் செவிசாய்க்க நடவடிக்கை எடுத்துள்ளது.

விசேடமாக மக்கள் மயமான அரசமைப்பாக புதிய அரசமைப்பு திருத்தப்பட வேண்டும்
என்பதே எமது அரசின் நோக்கமாகும். அதனால் புதிய அரசமைப்பு திருத்தம்
தொடர்பில் சமூக கருத்தாடல் ஒன்றுக்குத் திறந்து விடப்பட வேண்டும்.

அதேபோன்று
நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அரசியல் கட்சிகள் மற்றும்
பிரதிநிதித்துவப்படுத்தாத ஏனைய அரசியல் கட்சிகளின் கருத்துக்களுக்கும்
செவிசாய்க்கப்படும்.

புதிய அரசமைப்புக்கான வேலைத்திட்டம் ஆரம்பம் : நாடாளுமன்றில் பிரதமர் தெரிவிப்பு | New Constitution Of Sri Lanka

அதன் பிரகாரம் அரசு வரைவு செய்யும் புதிய அரசமைப்பு சமூகத்தில் அனைத்து
தரப்பினரின் கருத்துக்களை மதித்து, வரைவு செய்யப்படுகின்ற, இதுவரை காலமும்
உருவாகாத மக்கள் மயமான அரசமைப்பாக அமையும்.

அத்துடன் நாட்டின் பிரதான சட்டமான அரசமைப்பு அடிக்கடி திருத்தப்படக்கூடாது
என்பதால், விசேட நிபுணர்களின் கருத்துக்களைக் கேட்டு, ஆழமாக ஆராய்ந்து
தயாரிப்பதே எமது அரசின் நோக்கமாகும். அதனால் இதற்காகச் சில காலம்
தேவைப்படும். எமது கொள்கைப் பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள பிரகாரம் அந்த
நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.

எமது அரசு ஆட்சிக்கு வந்து இன்னும் ஒரு வருடம் செல்லவும் இல்லை. இன்னும்
எங்களுக்கு 4 வருடங்கள் இருக்கின்றன. அதனால் இது தொடர்பில் அவசரப்படத்
தேவையில்லை. எமது ஆட்சிக் காலத்துக்குள் புதிய அரசமைப்பு திருத்தங்களை
மேற்கொள்வோம் என குறிப்பிட்டுள்ளார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.