அரசாங்கம், தமது சொந்த கால நிர்ணயத்தின்படி புதிய அரசியலமைப்பை
அறிமுகப்படுத்தும் என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார(Harshana Nanayakkara) நாடாளுமன்றத்தில்
தெரிவித்துள்ளார்.
புதிய அரசியலமைப்பு குறித்த ஒத்திவைப்பு விவாதத்தை எதிர்க்கட்சி
முன்வைத்ததற்கு பதிலளித்து உரையாற்றிய போதே அமைச்சர், இதனை குறிப்பிட்டுள்ளார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்
“நாயின் வால் எப்போது வேண்டுமானாலும் அசையாது, நாய் எப்போது வேண்டுமானாலும்
அதனை அசைக்கும். எனவே, நாங்கள் எங்கள் சொந்த காலக்கெடுவின்படி செயல்படுவோம்,”
என்று அமைச்சர் கூறியுள்ளார்.
இருப்பினும், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வாக்குறுதியளித்தபடி ஒரு புதிய
அரசியலமைப்பை அறிமுகப்படுத்தப்படும் என்று அமைச்சர் உறுதியளித்துள்ளார்.