குழந்தைகளின் மன உளைச்சலை குறைக்கும் விதமான பரீட்சை ஒன்றை 2028ஆம் ஆண்டு நடத்த உள்ளதாக பிரதமர் மற்றும் கல்வி அமைச்சரான ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
நாடளுமன்றத்தின் இன்றைய(10.03.2025) அமர்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இதன்போது தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அரசாங்கத்தின் தீர்மானம் தொடர்பில் ஹரிணி அமரசூரிய தெளிவுபடுத்தியுள்ளார்.
தர வேறுபாடு
அத்துடன், புலமைப்பரிசில் பரீட்சை மூலம் ஏற்படும் குழந்தைகளின் மன அழுத்தத்தை குறைக்க அரசாங்கம் நிபுணர் குழுவொன்றை நியமிக்கும் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
பாடசாலைகளுக்கு இடையிலான தர வேறுபாடு காரணமாகவே புலமைப்பரிசில் பரீட்சை போட்டிப் பரீட்சையாக மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால், பாடசாலைகளுக்கிடையிலான தர முரண்பாடுகளை களைய முயற்சிப்பதாக அவர் கூறியுள்ளார்.