முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அநுரவால் நியமிக்கப்பட்ட வடக்கு ஆளுநர் கடமைகளைப் பொறுப்பேற்றார்

வடக்கு மாகாண ஆளுநராக பதவியேற்றுக் கொண்ட நாகலிங்கம் வேதநாயகன் (N. Vethanayagan) தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

ஆளுநர் செயலகத்தில் இன்றைய தினம் (27) மிகவும் எளிமையான முறையில் புதிய ஆளுநர் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

இங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், ஊழலற்ற மக்கள் சேவையை முன்னெடுப்பதற்கு புதிய ஜனாதிபதி கிடைத்தமை இறைவனின்
செயல் என  தெரிவித்தார்.

ஆளுநர் பதவி 

தற்போது கிடைத்துள்ள ஜனாதிபதியால் நாம் எவருக்கும் பயப்படாது மக்களுக்கான
சேவைகளை முன்னெடுத்து செல்வதற்கு முடியும். அத்துடன் இவர்
ஜனாதிபதியாக வந்ததால் மாத்திரமே நான் இந்த பதவியைப் பெற்றுக்கொள்கிறேன் என குறிப்பிட்டார்.

அநுரவால் நியமிக்கப்பட்ட வடக்கு ஆளுநர் கடமைகளைப் பொறுப்பேற்றார் | New Northern Governor Assumed Duties

மேலும் இந்த இடத்தில் வேறு எந்த ஜனாதிபதி வந்திருந்தாலும் இந்த பதவி எனக்கு
கிடைத்திருக்கவும் மாட்டாது வேறொருவர் எனக்குப் பதவியை தந்திருந்தாலும் நான்
அதனை ஏற்றுக்கொள்ளவும் மாட்டேன் எனவும் ஆளுநர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை வடக்கு ஆளுநரின் கடமையேற்பு நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர்கள், திணைக்கள அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து
கொண்டனர். 

வாழ்த்துச் செய்தி

வடமாகாண ஆளுநருக்கு சர்வதேச இந்து மத பீடம்
வாழ்த்துக்களையும் ஆசிகளையும் தெரிவிப்பதாக அதன் செயலாளர் சிவ ஸ்ரீ
ராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா தெரிவித்துள்ளார்.

அநுரவால் நியமிக்கப்பட்ட வடக்கு ஆளுநர் கடமைகளைப் பொறுப்பேற்றார் | New Northern Governor Assumed Duties

அரசாங்க அதிபராக அவர் பதவி வகித்த காலத்தில் மிகுந்த நேர்மையாகவும்
மக்களுக்காக அர்ப்பணிப்புடனுமான சேவையிலும் ஈடுபட்டவர் என்பது தமிழ் பேசும்
மக்கள் அனைவருக்கும் தெரிந்த விடயம்.

அவரது அந்த உண்மையான உழைப்புக்கும்
நேர்மைக்கும் இந்த ஆளுநர் பதவி கிடைத்தது என்று சொன்னால் அது மிகையாகாது அவரது
சேவை தொடர எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய வேண்டும் என்று அந்த வாழ்த்துச்
செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.