முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

புதிய எதிர்க்கட்சி கூட்டணி அங்குரார்ப்பணம்! கொழும்பை முடக்கிய போராட்டத்துக்கு பாரிய திட்டம்

அரசாங்கத்தின் ஊழல், தவறான நிர்வாகம் மற்றும் ஜனநாயக விரோத நடைமுறைகளுக்கு எதிராக நவம்பர் 21 ஆம் திகதி நுகேகொடையில் ஒரு பாரிய பேரணியை புதிய எதிர்க்கட்சிகளின் கூட்டணி நடத்தவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்

இலங்கையின் பல முக்கிய எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகளை ஒன்றிணைத்து, மகா ஜன ஹண்ட (மக்களின் குரல்) என்ற புதிய எதிர்க்கட்சி கூட்டணி நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டணியில் சிறிலங்கா பொதுஜன பெரமுன , சிறிலங்கா சுதந்திரக் கட்சி , ஐக்கிய தேசியக் கட்சி , பிவிதுரு ஹெல உறுமய , மக்கள் ஐக்கிய முன்னணி, தேசிய சுதந்திர முன்னணி , சிறிலங்கா மகாஜன கட்சி மற்றும் நவ ஜனதா பெரமுன ஆகியன இடம்பெற்றுள்ளன.

நவம்பர் 21

இந்நிலையில் நவம்பர் 21 ஆம் திகதிக்கு பின்னர் நாடு முழுவதும் தொடர் பேரணிகள் நடத்தப்படும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

புதிய எதிர்க்கட்சி கூட்டணி அங்குரார்ப்பணம்! கொழும்பை முடக்கிய போராட்டத்துக்கு பாரிய திட்டம் | New Opposition Coalition Inaugurated Sri Lanka

இந்த நிகழ்வில் உரையாற்றிய பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர், சாகர காரியவசம்,

“கூட்டணிக் கட்சிகள் மத்தியில் கொள்கை வேறுபாடுகள் இருந்தபோதிலும் – ஜனநாயகத்தையும் மக்களின் உரிமைகளையும் பாதுகாக்க ஒன்றுபட்டுள்ளோம்.

தற்போதைய அரசாங்கத்தால் மக்களுக்கு அளிக்கப்பட்ட எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்ற முடியவில்லை. மக்கள் கடுமையான அழுத்தத்தில் உள்ளனர்.

மக்களின் நம்பிக்கை

அவர்கள் தங்கள் கட்சிக்கு நெருக்கமானவர்களை காவல்துறை போன்ற நிறுவனங்களில் நியமிப்பதன் மூலம் தங்கள் அரசியல் நிகழ்ச்சி நிரல்களை செயல்படுத்துகிறார்கள்.

புதிய எதிர்க்கட்சி கூட்டணி அங்குரார்ப்பணம்! கொழும்பை முடக்கிய போராட்டத்துக்கு பாரிய திட்டம் | New Opposition Coalition Inaugurated Sri Lanka

பெலவத்தையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியை குற்றப் புலனாய்வுத் துறையிலும் நியமிக்கிறார்கள்.

இந்த அரசாங்கம் சட்டத்தின் ஆட்சியை அழிப்பதன் மூலம் மக்களின் நம்பிக்கையை உடைத்து விட்டது.

எனவே, மக்களின் வாழ்க்கை உரிமையை உறுதி செய்வதற்காக இந்த பேரணியை ஏற்பாடு செய்கிறோம்” என்றும் அவர் கூறினார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்