புத்தாண்டு தினத்தன்று அமெரிக்காவின்(us) நியூ ஓர்லியன்ஸில் பகுதியில் மக்கள் கூட்டத்தின் மீது ‘ட்ரக்’ மோதியதில் குறைந்தது 10 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
அத்துடன் இந்த சம்பவத்தில் 35 பேர் வரை காயமடைந்துள்ளனர். விபத்து ஏற்படுத்திய ‘ட்ரக்’ ஓட்டி வந்த நபர் கூட்டத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சந்தேகநபர் கொல்லப்பட்டார்.
காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிசூட்டில் சந்தேகநபர் கொல்லப்பட்டார்.
#BREAKING At least 10 killed, 30 injured as car plows into crowd in US city of New Orleans, says disaster preparedness agency ⤵️ pic.twitter.com/SKQFrBtEQm
— Anadolu English (@anadoluagency) January 1, 2025
இன்று மதியம் சுமார் 3:15 மணியளவில் நியூ ஓர்லியன்ஸில் உள்ள போர்பன் ஸ்ட்ரீட் மற்றும் ஐபர்வில்லி சந்திப்பிற்கு அருகே கார் மக்கள் கூட்டத்தில் புகுந்தது.
சம்பவத்தின் போது அங்கிருந்தவர்களின் தகவலின்படி, போர்பன் தெருவில் ஒரு டிரக் அதிவேகமாக மக்கள் மீது மோதியது. இதைத் தொடர்ந்து,ஓட்டுநர் வாகனத்தை விட்டு வெளியேறி சுடத் தொடங்கினார், மேலும் காவல்துறையினர் திருப்பிச் சுட்டனர் என்று தெரிவித்தனர் .
பிரபல சுற்றுலாத் தலம்
காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் நடந்த போர்பன் தெரு, நியூ ஓர்லியன்ஸின் பிரபல சுற்றுலாத் தலமாகும். போர்பன் தெருவில் நடந்த புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு ஆயிரக்கணக்கானோர் வந்ததாக கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி பைடன்(biden), எதிர்கால ஜனாதிபதி ட்ரம்ப் (trump)ஆகியோர் கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளனர்.