விஜய் டிவி
விஜய் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி முடிந்தவுடன் அடுத்த ஷோ, ஒரு சீரியல் முடிந்தவுடன் அடுத்த புதிய தொடர் என களமிறக்கி வருகிறார்கள்.
50 நாட்களை தாண்டி ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் 8வது சீசன் முடிவுக்கு வரப்போகும் நிலையில் விஜய் டிவி புதிய சீரியல்களை களமிறக்க தயாராகி வருகின்றன.
சன் டிவி எதிர்நீச்சல் சீரியல் புகழ் மதுமிதா நாயகியாக நடிக்க அய்யனார் துணை என்ற தொடர் ஒளிபரப்பாக இருக்கிறது.
அடுத்து மோதலும் காதலும் சீரியல் புகழ் சமீர் மற்றும் முத்தழகு சீரியல் நாயகி ஷோபனா இருவரும் ஜோடியாக நடிக்க பூங்காற்று திரும்புமா என்ற சீரியல் ஒளிபரப்பாக உள்ளது.
3வது தொடர்
ஏற்கெனவே 2 புதிய சீரியல்கள் அறிவிப்பு வெளியாக இப்போது 3வது புதிய தொடரின் தகவல் வெளியாகியுள்ளது. அந்த தொடருக்கு சிந்து பைரவி என பெயர் வைத்துள்ளனர்.
View this post on Instagram
சன் டிவி எதிர்நீச்சல் சீரியல் புகழ் காயத்ரி மற்றும் நடிகை சஹானா இருவரும் நடிக்கிறார்களாம். ஆனால் மற்றபடி சீரியலின் நாயகன்-நாயகி குறித்து எந்த தகவலும் இல்லை.