புதிய கடற்படைத் தளபதியாக நியமனம் பெற்ற வைஸ் அட்மிரல் காஞ்சனா பானகொட (Vice Admiral Kanchana Banagoda) தமது கடமைகளை சற்றுமுன்னர் பொறுப்பேற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடற்படைத் தலைமையகத்தில் இன்று (31) அவர் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.
புதிய கடற்படைத் தளபதியின் உத்தியோகபூர்வ நியமனக் கடிதம் நேற்று (30) ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்கவினால் (Nandika Sanath Kumanayake) கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் வைத்து அவருக்கு வழங்கப்பட்டது.
கடற்படை தளபதி
இலங்கை கடற்படையின் புதிய தளபதியான வைஸ் அட்மிரல் காஞ்சன பனாகொட, ஓகஸ்ட் 2024 முதல் இலங்கை கடற்படையின் தலைமை அதிகாரியாக பணியாற்றினார்.
இந்த நிலையில் இலங்கை கடற்படையில் பல்வேறு விரைவுத் தாக்குதல் கப்பல்கள், கப்பல்கள் மற்றும் நிறுவனங்களுக்கு கட்டளையிடும் சிறப்பை கடற்படைத் தளபதி பெற்றுள்ளார்.
இதேவேளை, இலங்கை இராணுவத்தின் 25வது தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ (Lasantha Rodrigo) சற்று முன்னர் இராணுவ தலைமையகத்தில் தமது கடமைகளை பொறுப்பேற்றார்.
இராணுவத் தளபதி ஜெனரல் விக்கும் லியனகே (Vikum Liyanage) மற்றும் கடற்படைத் தளபதி அட்மிரல் பிரியந்த பெரேரா (Vice Admiral Priyantha Perera) ஆகியோர் இன்று (31) தமது பதவிகளில் இருந்து ஓய்வு பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.