பாக்கியலட்சுமி
விஜய் டிவியில் பல வருடங்களாக ஒளிபரப்பாகும் தொடர்களில் ஒன்று பாக்கியலட்சுமி.
கொரோனா காலகட்டத்தில் சில புதுமுகங்கள் வைத்து தொடங்கப்பட்ட இந்த தொடர் பெங்காலியில் ஒளிபரப்பான ஸ்ரீமோயி என்ற தொடரின் ரீமேக் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.
தற்போது தமிழில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி விரைவில் முடிவுக்கு வரப்போகிறது என்ற தகவல் சமூக வலைதளங்களில் வலம் வந்தாலும் உறுதியான தகவல் இல்லை.
ஆரம்பம்
தமிழில் சீரியல் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வர பாக்கியலட்சுமி தொடரின் புதிய தொடக்கம் குறித்து ஒரு தகவல் வலம் வருகிறது. அதாவது ஹிந்தியில் அனுபமா என்ற பெயரில் ஸ்ரீமோயி தொடர் ரீமேக் ஆகியிருந்தது.
தற்போது ஹிந்தியில் ஒளிபரப்பான அனுபமா தொடரை அனு என்ற பெயரில் தமிழில் டப் செய்து கலர்ஸ் தமிழ் ஒளிபரப்ப முடிவு செய்துள்ளார்களாம்.
விரைவில் அனு தொடரின் ஆரம்பம் குறித்த தகவல் வெளியாகும் என கூறப்படுகிறது.
View this post on Instagram