இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் உட்பட பல நாடுகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட 30 அமெரிக்க தூதுவர்கள் மற்றும் மூத்த இராஜதந்திர அதிகாரிகளை திரும்ப அழைக்க ட்ரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கொள்கைகளை முழுமையாக ஆதரிப்பவர்களுடன் அமெரிக்க இராஜதந்திர கொள்கைகளை செயல்படுத்துவதற்கான ஒரு நடவடிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பதவிக்காலம் முடிவு
அதன்படி, இலங்கை உட்பட 30 நாடுகளில் உள்ள அமெரிக்க தூதுவர்கள் மற்றும் சிரேஷ்ட இராஜதந்திர அதிகாரிகளின் பதவிக்காலம் ஜனவரியில் முடிவடையும் என்று அமெரிக்க அரசாங்கம் கடந்த வாரம் அவர்களுக்கு அதிகாரப்பூர்வமாக அறிவித்ததாக கூறப்படுகிறது.

Image Credit: PBS
இந்த அனைத்து இராஜதந்திர அதிகாரிகளும் முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகத்தால் நியமிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களுக்கு இதுவரை அந்த பதவிகளில் பணியாற்ற வாய்ப்பு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அமெரிக்க தூதுவர்கள் மற்றும் இராஜதந்திரிகள்
இந்நிலையில், 13 ஆப்பிரிக்க நாடுகள், ஆறு ஆசிய நாடுகள், நான்கு ஐரோப்பிய நாடுகள், இரண்டு மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் இரண்டு தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளைச் சேர்ந்த அமெரிக்க தூதுவர்கள் மற்றும் இராஜதந்திரிகளை ட்ரம்ப் நிர்வாகம் திரும்ப அழைத்துள்ளது.

Image Credit:
Anadolu Ajansı
இதேவேளை, எந்தவொரு நிர்வாகத்திலும் இதுபோன்ற மாற்றங்கள் வழக்கமான நடைமுறை என்று அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

