இஸ்ரேலின்(israel) தாக்குதலில் உயிரிழந்த கர்ப்பிணியின் வயிற்றில் இருந்த குழந்தையை மருத்துவர்கள் தக்க நேரத்தில் காப்பாற்றி உள்ளனர்.
மத்திய காசாவில் உள்ள அகதிகள் முகாம் மீது சனிக்கிழமை நள்ளிரவுவேளை இஸ்ரேல் விமானப்படை குண்டுவீச்சு தாக்குதலை மேற்கொண்டது.
இந்த தாக்குதலில் ஒன்பது மாத கர்ப்பிணியாக இருந்த ஓலா அட்னான் ஹர்ப் அல்-குர்த், என்பவர் படுகாயமடைந்தார்.
படுகாயமடைந்த அவர் உடனடியாகவே மத்திய காசாவில் உள்ள அல்-அவ்தா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஆபத்தான நிலையில் கர்ப்பிணிப் பெண்
கர்ப்பிணிப் பெண் ஆபத்தான நிலையில் வருவதைக் கண்ட அவசர சிகிச்சைப் பிரிவு மருத்துவர்கள் அவரை அவசர சிகிச்சைப்பிரிவிற்கு கொண்டு சென்றனர்.
எனினும் அவர் அங்கு உயிரிழந்த நிலையில் கர்ப்பிணியின் வயிற்றில் இருந்த குழந்தையை காசா மருத்துவமனை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து வெளியே எடுத்தனர்.
நலமுடன் குழந்தை
குழந்தைக்கு உடனடியாக சிகிச்சை அளித்ததையடுத்து தற்போது நலமுடன் உள்ளது.
நள்ளிரவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உள்பட 24க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.