ராஷ்மிகா – ஸ்ரீலீலா
நடிகைகள் ராஷ்மிகா மந்தனா மற்றும் ஸ்ரீலீலா இருவருக்கும் கைவசம் பல திரைப்படங்கள் உள்ளன. கோலிவுட் முதல் பாலிவுட் வரை கலக்கிக்கொண்டிருக்கும் இவர்கள் இருவரும் மார்க்கெட்டில் உச்சத்தில் உள்ளனர்.
குறிப்பாக நடிகை ஸ்ரீலீலா தற்போதைய சென்சேஷனல் நடிகையாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அதுவும் நடனம் என்று வந்துவிட்டால் இவரை அடித்துக்கொள்ள ஆளே இல்லை என்று தான் சொல்லவேண்டும். புஷ்பா 2 திரைப்படத்தில் கூட இவர் ஆடிய நடனம் தற்போது வரை இன்ஸ்டாகிராமில் ரீல்ஸாக வந்துகொண்டு இருக்கிறது.
பிரதீப் ரங்கநாதன் LIK பட கதை இதுதான்.. அப்பா, மகன் ஒரே பெண்ணை காதலிக்கிறார்களா
அடுத்த சென்சேஷனல் நடிகை
இந்த நிலையில், ராஷ்மிகா மற்றும் ஸ்ரீலீலாவை ஓரங்கட்டும் வகையில் தெலுங்கில் கெத்திகா ஷர்மா எங்கும் நடிகை களமிறங்கியுள்ளார். நிதின் நடிப்பில் உருவாகியுள்ள ராபின் வுட் திரைப்படத்தில் இடம்பெறும் சிறப்பு பாடலில் நடனமாடி ரசிகர்களை நடிகை கெத்திகா ஷர்மா கவர்ந்துள்ளார்.
இதன்மூலம் இவர் தான் அடுத்த சென்சேஷனல் நடிகை என ரசிகர்கள் கூறி வருகிறார்கள். மேலும் இப்பாடலில் இடம்பெறும் ஹூக் ஸ்டெப் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.