நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்
கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை கலக்கிக்கொண்டிருக்கும் தனுஷ், ஹீரோவாக மட்டுமின்றி இயக்குநராகவும் தொடர்ந்து பிஸியாக இருக்கிறார்.
கடந்த ஆண்டு ராயன் படத்தின் வெற்றிக்கு பின், இவர் இயக்கத்தில் உருவாகி நேற்று வெளிவந்த திரைப்படம் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்.


நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைவிமர்சனம்
இளைஞர்களை கவரும் வகையில் அமைந்திருந்த இப்படத்தில் அனிகா, பவிஷ், மேத்யூ தாமஸ், பிரியா வாரியர் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். ஜி.வி. பிரகாஷ் இசையில் உருவான இப்படத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
முதல் நாள் வசூல் விவரம்
இந்த நிலையில், முதல் நாள் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படம் முதல் நாள் உலகளவில் ரூ. 3 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படத்திற்கான வசூல் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

