செப்டம்பர் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டு தற்போது நீர்கொழும்பு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சாவுக்கு சிறப்பு பாதுகாப்பு மற்றும் மருத்துவ வசதிகளை வழங்க நீதிமன்றம் சிறைச்சாலைத் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
சிறைச்சாலை வட்டாரங்களின்படி, நிமல் லான்சா சுமார் 30 கைதிகளுடன் ‘A 01’ விடுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார், மேலும் அவரது உடல்நிலை நன்றாக உள்ளது என்பதை சிறை மருத்துவ பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
எந்த சிறப்பு சலுகைகளும் வழங்கப்படவில்லை
அவருக்கு எந்த சிறப்பு சலுகைகளும் வழங்கப்படவில்லை, அவருக்கு ஒரு பாய் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது, மற்ற கைதிகளைப் போலவே, அவர் வெளியில் இருந்து உணவு கொண்டு வர சிறைச்சாலையின் அனுமதியைகோரியுள்ளார்.

சிறைச்சாலை அதிகாரசபையிடம் மனைவி விடுத்துள்ள கோரிக்கை
இதற்கிடையில், முன்னாள் அமைச்சரை சந்திக்க வெளியாட்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்தி, தன்னையும் மற்ற இரண்டு நியமிக்கப்பட்ட நபர்களையும் மட்டுமே அவரை சந்திக்க அனுமதிக்குமாறு லான்சாவின் மனைவி சிறைச்சாலை அதிகாரசபையிடம் கோரிக்கை விடுத்துள்ளார், முன்னாள் அமைச்சருடன் கலந்தாலோசித்த பிறகு இது குறித்து முடிவு எடுக்கப்பட உள்ளது.


