ஜீ தமிழ்
ஜீ தமிழ், தமிழ் சின்னத்திரை ரசிகர்களால் பார்க்கப்படும் தொலைக்காட்சிகளில் ஒன்று.
சீரியல்கள் தான், ரியாலிட்டி ஷோக்கள் தான் என இல்லாமல் இரண்டையும் சரிசமமாக ஒளிபரப்பு மக்களை கவர்ந்து வருகிறார்கள்.
இப்போது இந்த தொலைக்காட்சியில் ஸ்பெஷல் என்றால் ஜீ தமிழ் குடும்ப விருதுகள் தான், பிரம்மாண்டத்தின் உச்சமாக நடந்து முடிந்துள்ளது, எப்போது தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என்று மக்கள் ஆர்வமாக உள்ளனர்.

கிளைமேக்ஸ்
இந்த நிலையில் ஜீ தமிழில் முடிவுக்கு வந்துள்ள 1000 எபிசோடுகளை தாண்டிய ஒரு சீரியல் குறித்த தகவல் வந்துள்ளது. அதாவது கடந்த 2021ம் ஆண்டு ஸ்வாதி ஷர்மா மற்றும் ஆனந்த் செல்வன் ஜோடியாக நடிக்க தொடங்கப்பட்ட சீரியல் தான் நினைத்தாலே இனிக்கும்.

இந்த தொடர் 1300 எபிசோடுகளை தாண்டி ஒளிபரப்பாக தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இந்த சீரியலின் கிளைமேக்ஸ் காட்சிகள் சமீபத்தில் தான் எடுத்து முடித்துள்ளனர், அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
இந்த சீரியல் ரசிகர்கள் தொடர் முடிவுக்கு வந்ததையடுத்து கொஞ்சம் வருத்தத்திலும் உள்ளனர்.
View this post on Instagram

