நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தல்கள் முடிவுகள் தற்போது வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், தேசிய மக்கள் சக்தி முன்னணி வகிக்கிறது.
இந்நிலையில் பொதுத் தேர்தலில் போட்டியிட்ட ராஜபக்ச குடும்ப உறவினரான நிபுன ரணவக்க படுதோல்வியடைந்துள்ளார்.
2020ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மாத்தறையில் அதிக வாக்குகளைப் பெற்றவராக சாதனை படைத்திருந்தார்.
படுதோல்வி
எனினும் படுதோல்வியடைந்த நிபுண ரணவக்க இம்முறை ஆசனத்தைப் பெறத் தவறியுள்ளார்.
தற்போது வெளியான தேர்தல் பெறுபேறுகளுக்கு அமைய, கடந்த தேர்தல் வெற்றி பெற்ற பலர் இம்முறை படுதோல்வி அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.