தமிழ் சினிமாவில் மிக இளம் வயதிலேயே இயக்குனராகி புகழ் அடைந்தவர் கார்த்திக் நரேன். அதன் பின் அவரின் படம் நரகாசுரன் பிரச்சனையில் சிக்க அதிலிருந்து அவர் மீண்டு வரவே பல வருடம் ஆகியது, தற்போது அதர்வா நடிப்பில் கார்த்திக் இயக்கத்தில் வெளிவந்துள்ள நிறங்கள் மூன்று எப்படியுள்ளது பார்ப்போம்.
கதைக்களம்
அதர்வா தமிழ் சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்று போராடி வருகிறார். அதே நேரத்தில் அவர் அதிகாலை ஒரு பைலட் படம் எடுக்கும் போது ஒரு பெண்ணை கடுத்துவது போல் காட்சியை எடுக்கிறார்.
அதை ஒரு பள்ளி மாணவன் பார்க்க, அதே நேரத்தில் அவரின் தோழி அம்மு அபிராமியும் தொலைந்து போகிறார். அதர்வா தான் தன் தோழியை கடத்தினார் என்று பள்ளி மாணவர் அதர்வாவை துரத்துகிறார்.
இதே நேரத்தில் அதர்வா கதையை ஒரு முன்னணி இயக்குனர் திருடி படமாக எடுக்க, அதர்வா மிக மன உளைச்சலுக்கு செல்கிறார், இதை தொடர்ந்து அம்மு அபிராமியை யார் கடத்தியது, அதர்வா இயக்குனர் ஆனாரா என்பதே மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்
அதர்வா நீண்ட நாட்கள் கழித்து அவரை திரையில் பார்க்கிறோம், ஒரு வாய்ப்பு தேடும் இளைஞனாகவே முதலில் அவரை பார்க்க நமக்கு பரிதாபம் வரவில்லை. படம் முழுவது அத்தனை போதை பழக்கத்தையும் அவர் செய்கிறார், பிறகு ஏன் இவர் பரிதவிப்பு நமக்கு ஒட்ட வேண்டும்.
தன்னுடைய பிலாசிபி க்ளாஸை எல்லாம் கார்த்திக் நரேன் அதர்வா வழியில் நமக்கு சொல்கிறார், அதற்கு உறுதுணையாக போதை பொருட்களை காட்டுவது கண்டிப்பாக எந்த விதத்திலும் ஏற்கும்படி இல்லை.
பள்ளி மாணவனாக வரும் துஷ்யந்த் தனது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார், படத்தின் முதல் பாகம் எல்லாம் ஒரு இடத்தை நோக்கி செல்ல, அதனால் நாமும் விறுவிறுப்பாக செல்ல முடிகிறது.
இரண்டாம் பாதி படம் எதை நோக்கி செல்கிறது என்றே தெரியவில்லை, சரத்குமார் கதாபாத்திரம் என்ன என்பதன் குழப்பம் படம் முழுவதுமே நீடிக்கிறது, அதிலும் அவருக்கான எண்டிங் ஜன்னல் சீட்-ல உட்காந்த கொல்வான் என்று தெரிந்தே அங்க போய் உட்கார கில்லி மீம் தான் நியாபகம் வருகிறது.
படத்தின் மிகப்பெரிய பலம் ஜேக்ஸ் பிஜாய் இசை, படத்தின் தன்மைக்கு ஏற்றார் போல் அசத்தியுள்ளார். ஒளிப்பதிவு பல இடங்களில் நன்றாக இருந்தாலுன், டெனட் படம் போல் ஒரு சண்டைக்காட்சி கொஞ்சம் பொறுமையை சோதிக்கிறது.
க்ளாப்ஸ்
படத்தின் முதல் பாதி, விறுவிறுப்பாகவே செல்கிறது.
பல்ப்ஸ்
இரண்டாம் பாதி, முதல் பாதியில் இருந்த விறுவிறுப்பு டுவிஸ்ட் முடிச்சுக்கள், அதற்கான முடிவுகள் எதுவும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை
.