முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் ஜப்பானின் பிரபல கார் நிறுவனம்

ஜப்பான் கார் தயாரிப்பு நிறுவனமான நிசான் மோட்டார் (Nissan Motor), தற்போது புதிதாக தனது உலகளவிய வர்த்தகத்தில் 11,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக அறிவித்திருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

அத்துடன் இந்த 11,000 ஊழியர்களை கணக்கில் எடுத்துக்கொண்டால், நிசான் மொத்தமாக 30,000 பேரை பணியில் இருந்து நீக்கியுள்ளதாக மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறித்த நிறுவனமானது ஏற்கனவே 20,000 ஊழியர்கள் அதாவது இது மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் சுமார் 15% குறைக்க திட்டமிட்டு இருந்த வேளையில் தற்போது 11,000 பேரை புதிதாக நீக்கவுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பணிநீக்க அறிவிப்பு

இந்த பணிநீக்க அறிவிப்பை ஜப்பான் (Japan) நாட்டின் பொது ஒலிபரப்பு நிறுவனமான NHK தெரிவித்துள்ள நிலையில் நிசானும் ஹோண்டாவும் இணைப்பு குறித்த பேச்சுவார்த்தைகளை அதிகாரப்பூர்வமாக இரத்து செய்த பின்பு எடுக்கப்படும் அதிரடி நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.

ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் ஜப்பானின் பிரபல கார் நிறுவனம் | Nissan Motor Will Cut 10 000 Employees Globally

நிசான் மோட்டாரின் இந்த 30,000 ஊழியர்களை நீக்கும் முடிவு, நிறுவனத்தின் நிதி நிலைமையை மேம்படுத்துவதற்காக எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நிசான் மார்ச் மாதத்தில் முடிவடைந்த நிதியாண்டில் 700-750 பில்லியன் யென் (4.74-5.08 பில்லியன் டொலர்) நிகர நஷ்டத்தை எதிர்பார்ப்பதாக முதலீட்டாளர்களுக்கு முன் கணிப்பை வெளியிட்டது.

சீன இலத்திரனியல் வாகனங்கள்

இந்த நஷ்டம், நிறுவனத்தின் மதிப்பு குறைப்புக்கு முக்கியமான காரணமாக உள்ளது. இந்த இழப்பை சமாளிக்கவே அடுத்த காலாண்டில் அல்லது நிதியாண்டில் இலாபகரமாக மாற திட்டமிட்டு இந்த 30,000 பேரை பணிநீக்கம் செய்யும் திட்டத்தை கையில் எடுத்துள்ளது.

ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் ஜப்பானின் பிரபல கார் நிறுவனம் | Nissan Motor Will Cut 10 000 Employees Globally

ஜப்பான் நாட்டின் இரு மாபெரும் கார் தயாரிப்பு நிறுவனமான நிசான் மற்றும் ஹோண்டா, டிசம்பர் 2024 இல் தங்கள் வர்த்தகம் மற்றும் உற்பத்தி தளங்களை இணைப்பது குறித்த பேச்சுவார்த்தைகளை தொடங்கியிருந்தன.

இந்த இணைப்பு, உலகின் மூன்றாவது பெரிய வாகன உற்பத்தியாளரை உருவாக்கும் மாபெரும் இலக்கை கொண்டிருந்தது.

ஆனால், ஆரம்பம் முதலே இந்த இணைப்பு குறித்து சந்தேகங்கள் இருந்தன, இறுதியில் பேச்சுவார்த்தைகள் ரத்து செய்யப்பட்டன.

இந்த முடிவு, ஜப்பான் வாகனத் துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, ஏனெனில் இணைப்பு நடந்திருந்தால், இரு நிறுவனங்களும் சீன இலத்திரனியல் வாகனங்களின் ஆதிக்கத்தை எதிர்த்து போட்டிபோடும் வல்லமையை பெற்று இருக்கும்.

அமெரிக்க வாகன சந்தை

நிசானின் தற்போதைய நெருக்கடி, உலகளாவிய வாகன சந்தையில் ஜப்பான் நிறுவனங்களின் பின்னடைவை வெளிப்படுத்துகிறது. மின்சார வாகனங்களுக்கு மாறுவதற்கு தேவையான முதலீடு மற்றும் தொழில்நுட்ப மேம்பாடு ஆகியவை நிசானுக்கு பெரும் சவாலாக உள்ளன.

ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் ஜப்பானின் பிரபல கார் நிறுவனம் | Nissan Motor Will Cut 10 000 Employees Globally

மேலும், சீனாவில் உள்ளூர் நிறுவனங்களுடனான போட்டி, அமெரிக்க சந்தையில் குறைந்த விற்பனை, மற்றும் உயரும் மூலப்பொருள் செலவுகள் ஆகியவை நிசானின் இலாபத்தை குறைத்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த சூழலில் தான் வேறு வழியே இல்லாமல், 30,000 பேரை பணிநீக்கம் செய்து நிறுவனத்தின் செலவு குறைத்து நீண்டகால வளர்ச்சிக்கு தரமான கார்களை கொண்டுவரும் திட்டத்தை கையில் எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.