ஓகஸ்ட் மாதத்திற்கான எரிபொருள் விலையில் எந்த மாற்றமும் இருக்காது என்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
எரிபொருள் சில்லறை விலைகளில் மாதாந்திர திருத்தம் செய்யப்படுவதற்கு இணங்க இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தற்போதைய விலைகள்
இந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் 30ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலையில் திருத்தங்களின் படி தற்போது,
லங்கா ஓட்டோ டீசல் ஒரு லீற்றரின் விலை 289 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மண்ணெண்ணெய் ஒரு லீற்றரின் விலை 185 ரூபாவாக பதிவாகியுள்ளது.
92 ஒக்டேன் பெட்ரோல் ஒரு லீற்றரின் விலை 305 ரூபாவாக பதிவாகியுள்ளது.

