நாட்டில் வெள்ள அபாயம் நீங்கியுள்ளதாக இன்று (11) காலை 6.30 மணிக்கு வெளியிடப்பட்ட நீரியல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டின் அனைத்து முக்கிய நதிகளும் சாதாரண நீர்மட்டத்தினை எட்டியுள்ளதால் எந்தவித சிறிய அல்லது பெரிய வெள்ள அபாயமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
களனி, களு, மஹவலி, ஜின், நில்வலா, வாலவே உள்ளிட்ட முக்கிய நதிக்கரைகள் வெள்ள அபாய எச்சரிக்கை மட்டத்துக்குக் கீழே காணப்படுவதாக தெதரிவிக்கப்படுகின்றது.

நீரியல் மற்றும் அனர்த்த மேலாண்மை பிரிவின் தகவலின்படி இந்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
காலை 5.00 மணி முதல் 6.00 மணிவரை மேற்கொள்ளப்பட்ட நீர்மட்ட அளவீடுகளில், சில இடங்களில் மில்லிமீட்டர் அளவிலான சிறிய உயர்வுகள் மட்டுமே பதிவாகியுள்ளன.
கடந்த 21 மணிநேரத்தில் பெரும்பாலான பகுதிகளில் மழை குறைவாகவே பதிவாகியுள்ளது. மிக அதிக மழை மகுரு கங்கையில் – 29.4 மிமீ மற்றும் ஜின் கங்கையின் பத்தேகமையில் – 14.7 மிமீ என பதிவாகியுள்ளது.
இந்த அறிக்கை நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் பொறியாளர் எல். எஸ். சூரியபண்டார உறுதிப்படுத்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் என்றும், தற்போது எந்த நதிக்கரையும் உடனடி வெள்ள அபாயத்தை உருவாக்கும் நிலையில் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

